For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிங்கி ஆண்தான்... பரபரப்பு தகவல்கள்!

Google Oneindia Tamil News

Pinki Pramanik
கொல்கத்தா: கற்பழிப்பு புகாரில் சிக்கி கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிங்கி பிராமனிக்கின் உடலில் ஆண்களுக்கான குரோமோசோம்கள் இருப்பதாக மருத்துவப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாம். இதுதொடர்பான அறிக்கை விரைவில் கொல்கத்தா கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் பிரிவில் தங்கம் வென்றவர் தடகள வீராங்கனை பிங்கி. இவர் மீது சமீபத்தில் ஒரு பெண் பாலியல் பலாத்காரப் புகார் கொடுத்தார். அதில், தானும் பிங்கியும் சேர்ந்து வாழ்ந்து வருவதாகவும், பிங்கி ஒரு ஆண் என்றும், தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்றும், அவர் தன்னை திருமணம் செய்ய மறுத்து மோசடி செய்து விட்டதாகவும் கூறியிருந்தார்.

பெரும் பரபரப்பைக் கிளப்பிய இந்தப் புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த போலீஸார் பிங்கியைக் கைது செய்தனர். நேற்றுதான் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

அவருக்கு பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அதில் டிஎன்ஏ சோதனையும் ஒன்று. இதில்தான் ஒருவரை ஆணா, இல்லை பெண்ணா என்பதை உறுதியாகச் சொல்ல முடியும் என்பதால் இந்த சோதனையை நடத்தினர். தற்போது இந்தசோதனை முடிவு வந்து விட்டதாம்.

அதில், பிங்கி ஒரு ஆண் என்றும், அவருக்கு ஆண் குரோமோசோமே இருப்பதாகவும் அதாவது அவருக்கு எக்ஸ் ஒய் குரோமோசோம்கள் இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளாக தகவல்கள் கூறுகின்றன. இந்த அறிக்கை விரைவில் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

(பெண்களில் XX குரோமோசோம் இருக்கும். ஆண்களில் XY குரோமோசோம் இருக்கும்)

இந்த மருத்துவப் பரிசோதனையை கொல்கத்தாவில் உள்ள எஸ்.எஸ்.கே. எம். மருத்துவமனை டாக்டர்கள் மேற்கொகண்டனர். தற்போது இந்த அறிக்கை வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள பராசத் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இன்னும் ஒரு நாளில் அறிக்கை கோர்ட்டில் தாக்கல் செய்யப்படவுள்ளதாம்.

English summary
The doctors conducting tests on international athlete Pinki Pramanik, arrested on charge of raping a fellow runner, have found her to be male, sources told. According to the medical report, Pramanik has male chromosomes, sources close to the medical board in the SSKM hospital, which was made the nodal agency by a Barasat court, claimed. Sources indicated that the report shows Pramanik having X-Y chromosomes, which pertain to her male status. The Asian Games gold medallist has currently been lodged in Dum Dum jail.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X