For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இறுதிகட்ட போரில் சில வீரர்கள் போர்க் குற்றங்கள் செய்திருக்கலாம்: கோத்தபயா

By Siva
Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் நடந்த இறுதிகட்டப் போரில் ராணுவ வீரர்கள் போர்க் குற்றங்களில் ஈடுபடவேயில்லை என்று அந்நாட்டின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபயா ராஜபக்சே கூறி வந்தார். ஆனால் ராணுவ வீரர்கள் போர்க் குற்றங்களில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்று தற்போது தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடந்த இறுதிகட்டப் போரில் லட்சக் கணக்கான தமிழர்களை ராணுவ வீரர்கள் கொன்று குவித்தனர். மேலும் தமிழர்களையும், விடுதலைப் புலிகள் இயக்கத்தினரையும் கொடுமைப்படுத்தி கொலை செய்தனர். சிங்கள ராணுவ வீரர்கள் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதை உலகமே கூறியும் அவர்கள் அவ்வாறு செய்யவே இல்லை என்று அந்நாட்டின் பாதுகாப்புச் செயலாளரும், அதிபர் ராஜபக்சேவின் சகோதரருமான கோத்தபயா ராஜபக்சே தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் ராணுவ வீரர்கள் போர்க் குற்றங்களில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்று முதன்முறையாக ஒப்புக் கொண்டுள்ளார்.

இலங்கையில் உள்ள தியத்தலாவ ராணுவக் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கோத்தபயா கூறுகையில்,

இறுதி கட்டப் போரின்போது போர்க் குற்றங்களில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் யாரும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது. போரின்போது ராணுவத் தளபதிகளின் உத்தரவை மீறி சில வீரர்கள் சில குற்றங்களைத் செய்திருக்கக்கூடும்.

English summary
Sri Lankan defence secretary Gotabaya Rajapaksa has accepted for the first time that Lankan army committed warcrimes during the final stages of the war in the island nation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X