For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜீன்ஸ் போட மாட்டோம், செல்போன் பயன்படுத்த மாட்டோம்: உ.பி பஞ்சாயத்தில் மாணவிகள் வாக்குறுதி!

By Siva
Google Oneindia Tamil News

Jeans
முசாபர்நகர்: உத்தரபிரதேசத்தில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் தாங்கள் பிளஸ் டூ முடிக்கும் வரை ஜீன்ஸ் அணியமாட்டோம் என்றும், செல்போன் பயன்படுத்த மாட்டோம் என்று பஞ்சாயத்தை கூட்டி வாக்குறுதி அளித்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்திலுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் ஊர் பஞ்சாயத்தை கடந்த 16ம் தேதி கூட்டினர். பெரியவர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் பல்வேறு கிரமாங்கள் மற்றும் சாதியைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் 50 பேர் கலந்து கொண்டு வாக்குறுதி ஒன்றை அளித்தனர். அதாவது தாங்கள் பிளஸ் டூ படித்து முடிக்கும் வரை ஜீன்ஸ் அணிவதில்லை என்றும், செல்போன் பயன்படுத்தப் போவதில்லை என்றும் வாக்குறுதியளித்தனர்.

செல்போன்களால் ஏற்படும் தீங்குகள் குறித்து பேசிய மாணவிகள், பெரியோர்களின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து ஜீன்ஸ் அணியப்போவதில்லை என்று தெரிவி்த்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை அசாரா என்ற கிராமத்தில் நடந்த பஞ்சாயத்து கூட்டத்தில் காதல் திருமணத்திற்கு தடை விதிக்கப்பட்டதுடன் 40 வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் ஷாப்பிங் போகவும், செல்போன் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டது. இவ்வாறு பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Amid uproar over Taliban-like diktats against women by a village in Baghpat, girl students from various villages in this district convened their own 'community panchayat' and vowed not to use mobile phones till Class XII or wear jeans.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X