For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோண்ட்வானா பல்கலைக்கழக புத்தகத்தின்படி பிரணாப் இந்தியாவின் 14வது ஜனாதிபதியாம்

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: குடியரசுத் தலைவர் தேர்தலே இன்னும் முடியாத நிலையில் இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி என்று கோண்ட்வானா பல்கலைக்கழக புத்தக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தல் நாளை தான் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் பிரணாப் முகர்ஜி தான் இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவர் என்று அண்மையில் துவங்கப்பட்ட கோண்ட்வானா பல்கலைக்கழக புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஜனநாயகம் என்ற அந்த புத்தகம் பி.ஏ. அரசியல் அறிவியல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அந்த புத்தகத்தின் 84வது பக்கத்தில் இந்திய குடியரசுத் தலைவர்களின் பட்டியல் உள்ளது. அதில் 14வது குடியரசுத் தலைவர் என்று பிரணாப் முகர்ஜியின் பெயர் உள்ளது. இந்த புத்தக்த்தை அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சஞ்சய் கோர் மற்றும் அரசியல் அறிவியல் அறிஞர் மதுகர் அர்ஜுன்கர் ஆகியோர் எழுதியுள்ளனர்.

இது குறித்து பல்கலைக்கழக அதிகாரிகள் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Though Presidential polls are yet to held, Gondwana University has already described UPA candidate Pranab Mukherjee as "the 14th President of the country" in a just-published textbook.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X