For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துபாயில் நடந்தது என்ன... அறிக்கை அளிக்கை இந்திய தூதருக்கு உத்தரவு!

Google Oneindia Tamil News

SM Krishna
டெல்லி: துபாய் கடல் பகுதியில் இந்திய மீனவர் சேகர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விரிவான அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்கும்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கான இந்தியத் தூதர் லோகேஷுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சம்பந்தப்பட்ட அமெரிக்கக் கடற்படையினர் மீது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு நடவடிக்கை எடுக்குமாறு அந்த அரசிடம் வலியுறுத்திக் கூறும்படியும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

பென்டகன் விளக்கம் அளிக்க கோரிக்கை

இதேபோல அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளையும் மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் , நடந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு இந்தியத் தூதரக அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனராம்.

விசாரணை நடத்த அமெரிக்க அரசு உத்தரவு

இதற்கிடையே துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதாக அமெரிக்கக் கடற்படை தெரிவித்துள்ளது. அந்த கடற்படையின் பஹ்ரைன் உயர் அதிகாரியான கிரேட் ரேல்சன் இதுகுறித்துக் கூறுகையில், சம்பந்தப்பட்ட மீன்பிடிப் படகில் வந்தவர்களுக்கு அமெரிக்கக் கப்பலின் பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், அதைப் பொருட்படுத்தாது அவர்கள் தொடர்ந்து கப்பலை நோக்கி வந்துள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில் அமெரிக்கக் கடற்படை விதிமுறைகளின்படி அவர்களை தடுத்து நிறுத்துவதற்காக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். எனினும், இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

English summary
External affairs minister SM Krishna has ordered the Indian envoy in UAE to submit a detailed report on Tamil Nadu fisherman's killing by US navy near Dubai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X