For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மும்பை சிறையில் அபுஜிண்டால்- கசாப் இருவரிடமும் நேருக்கு நேர் விசராணை நடத்திய மும்பை போலீஸ்

By Mathi
Google Oneindia Tamil News

Ajmal Kasab and Abu Jundal
மும்பை: மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அபுஜிண்டாலை சிறையில் உள்ள தீவிரவாதி அஜ்மல்கசாப் அடையாளம் காட்டினான்.

சவூதி அரேபியாவில் பதுங்கியிருந்து இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட அபுஜிண்டாலை மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர். மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப்புக்கு இந்தி கற்றுக் கொடுத்தவன் அபுஜிண்டால். இருவரையும் நேருக்கு நேர் உட்கார வைத்து விசாரணை நடத்த மும்பை போலீசார் திட்டமிட்டனர். இதற்கு மகராஷ்டிரா மாநில அரசும் அனுமதி அளித்தது.

இதைத் தீவிரவாதி அஜ்மல் கசாப் அடைக்கப்பட்டிருக்கும் மும்பை ஆர்தர் சாலை சிறைக்கு அபுஜிண்டாலை போலீசார் அழைத்துச் சென்றனர். இருவரையும் நேருக்கு நேர் அமரச் செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அபுஜிண்டாலை அஜ்மல் கசாப் அடையாளம் காட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும் 2008-ல் தமக்கு இந்தி கற்றுக் கொடுத்தது அபுஜிண்டால்தான் என்றும் கசாப் கூறியுள்ளான்.

இருவரிடம் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் போது மேலும் பல புதிய தகவல்கள் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதேபோல் மும்பை தாக்குதலின் போது கராச்சியில் இருந்து கசாப் உள்ளிட்ட தீவிரவாதிகளுக்கு தாக்குதல் உத்தரவை பிறப்பித்த குரல் மாதிரியையும் ஜிண்டாலின் குரல் மாதிரியையும் ஒப்பிட்டு கராச்சியில் இருந்து உத்தரவிட்டு ஜிண்டால்தான் என்பதையும் போலீசார் உறுதி செய்துள்ளனர்.

English summary
Mumbai terror attack convict Ajmal Kasab and key 26/11 handler and Lashkar-e-Toiba operative Zabiuddin Ansari alias Abu Jundal were on Thursday questioned together by the police at the Arthur Road Jail in Mumbai. The terrorists were questioned inside Kasab's high-security prison.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X