For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி நடுவர் மன்றத்தை மத்திய அரசு தற்போதைக்கு கூட்ட முடியாது: நாராயணசாமி பேட்டி

By Siva
Google Oneindia Tamil News

Narayanasamy
சென்னை: நடப்பு கூட்டத்தொடரில் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முடியாது என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்தாலும் அதன் கொள்கை வேறு. அதனால் டெசோ மாநாடு நடத்துவது திமுகவின் கொள்கையாக இருக்கலாம். அப்படி இருக்கையில் டெசோ மாநாட்டை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தை அவர்கள் கவனிப்பதாகக் கூறுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

லோக்பால் மசோதாவை நடந்து வரும் மழைகால கூட்டத்தொடரில் நிறைவேற்ற முடியாது. லோக்பால் மசோதாவை நாடாளுமன்ற நிலைக்கு பரிசீலித்து வருகிறது. மேலும் இது குறித்து எதிர்கட்சிகள் வெட்டு தீர்மானங்கள் கொண்டு வந்துள்ளதால் அவர்களுடன் கலந்து பேசி மசோதாவை நடப்பு கூட்டத்தொடரிலேயே கொண்டு வர முடியாது.

பருவ மழை பொய்த்துவிட்டதால் ஏற்பட்டுள்ள வறட்சியை எப்படி சமாளிப்பது, மின்சார பற்றாக்குறையை போக்குவது, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது, சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து இந்த கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டியுள்ளது.

பாபா ராம்தேவ் விளம்பரத்திற்காக போராட்டம் நடத்துகிறார். இது நல்லதன்று. காவிரி நடுவர் மன்றத்தை தற்போதைக்கு மத்திய அரசால் கூட்ட முடியாது. இந்த விவகாரம் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அதன் தீர்ப்பு வந்த பிறகே எந்தஒரு முடிவும் எடுக்க முடியும். நாடாளுமன்றத்தில் மத்திய அரசைப் பற்றி மூத்த தலைவர் அத்வானி பேசியது துரதிர்ஷ்டவசமானது என்றார்.

நடப்பு கூட்டத் தொடரிலேயே லோக்பால் மசோதா ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் நேற்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Central minister Narayanasamy told that it is not possible to pass lokpal bill in monsoon session itself.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X