For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செவ்வாய் கிரகத்தில் யாரையாவது பார்த்தா உடனே 'இன்பார்ம்' பண்ணுங்க... நாசாவுக்கு ஒபாமா கோரிக்கை!

Google Oneindia Tamil News

Obama
ஏர்போர்ஸ் ஒன் விமானத்திலிருந்து: செவ்வாய் கிரகத்தில் ஏதாவது உயிரினம் இருப்பதாக தெரிய வந்தால், உடனே எனக்குத் தெரியப்படுத்துங்கள். மிக மிக நுன்னிய உயிரினமாக இருந்தாலும் கூட பரவாயில்லை, அதுதான் உலகுக்கு மிகப் பெரிய செய்தி என்று நாசா விஞ்ஞானிகளிடம் தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.

நாசா அனுப்பிய கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக இறங்கிய நிகழ்வை மனதைக் கொள்ளை கொள்ளும் சம்பவம் என்றும் வர்ணித்துள்ளார் ஒபாமா வர்ணித்துள்ளார்.

அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஒபாமா இடையில் அயோவா மாகாணத்தில் தரையிறங்கினார். அப்போது அமெரிக்க அதிபருக்கான ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் இருந்தபடி கலிபோர்னியாவில் உள்ள நாசாவின், ஜெட் புரபல்சன் ஆய்வகத்திற்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒபாமா அங்கிருந்த விஞ்ஞானிகளிடம் கலந்துரையாடினார். அப்போதுதான் இதைத் தெரிவித்தார் அவர்.

விஞ்ஞானிகளிடம் ஒபாமா பேசுகையில், செவ்வாய் கிரகத்தில் ஏதேனும் உயிரினம் இருப்பதை கியூரியாசிட்டி கண்டுபிடித்தால், அது குறித்த தகவல் கிடைத்தால் உடனே எனக்குச் சொல்லுங்கள். மிக மிக நுன்னிய உயிரினமாக இருந்தாலும் கூட பரவாயில்லை, அது மிகப் பெரிய கண்டுபிடிப்பாக, உலகுக்கு மிகப் பெரி செய்தியாக அமையும்.

எத்தனையோ பணிகளில் நான் பிசியாக இருக்கிறேன் என்றாலும், எனக்கு இந்த செய்திதான் மிகப் பெரிய விஷயமாக அமையும்.

கியூரியாசிட்டியின் செவ்வாய் தரையிறங்கல் மிகப் பெரிய விஷயம், மனதைக் கொள்ளை கொள்கிறது, மிகப் பெரிய திரில்லாக இருக்கிறது. செவ்வாயில் கியூரியாசிட்டி காலெடுத்து வைத்தது அமெரிக்க மக்களை மட்டுமல்ல உலகெங்கும் உள்ள மக்களை பரவசப்படுத்தியுள்ளது என்றார் ஒபாமா.

பேச்சின்போது, ஜெட் புரபல்சன் ஆய்வகத்தின் இயக்குநர் போபக் பெர்டோவ்ஸ்கியையும் கிண்டலடித்தார் ஒபாமா. போபக் வைத்துள்ளதைப் போன்ற ஹேர்ஸ்டைல் எனக்குப் பிடிக்கும். அதே போல வைத்துக் கொள்ள நானும் விரும்பினேன். ஆனால் என்னுடைய குழுவினர் அதைத் தடுத்து விட்டார்கள் என்றார் சிரித்தபடி.

English summary
Hailing NASA's "mind-boggling" Mars landing of the Curiosity rover, President Barack Obama urged the scientists operating the craft on Monday to phone home immediately if they find any extra-terrestrials. "If in fact you do make contact with Martians, please let me know right away," Obama told controllers at the Jet Propulsion Laboratory in California. "I've got a lot of other things on my plate, but I suspect that that will go to the top of the list. Even if they're just microbes, it will be pretty exciting."
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X