For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈழத் தமிழர் பிரச்சனையில் தலையிடும் தென்னாப்பிரிக்கா: சமாதான பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு

Google Oneindia Tamil News

கொழும்பு: ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண இலங்கையின் ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் தென்னாப்பிரிக்கா வருமாறு தென்னாப்பிரிக்க தேசிய காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியதாவது:

தென்னாபிரிக்க தேசிய காங்கிரஸைச் சேர்ந்த ஏப்ரஹாம் ஏப்ரஹான் தலைமையிலான குழுவினர் அண்மையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சந்தித்துப் பேசினர். அப்போது 2011 ம் ஆண்டு முதல் 2012 ம் ஆண்டு வரை அரசு தரப்புடன் சுமார் 18 முறை பேச்சுவார்த்தை நடத்தியதை கூறியிருந்தோம். ஆனால், பேச்சு வார்த்தையில் இலங்கை அரசு முழு மனதுடன் பங்கேற்கவில்லை ௭ன்பதையும், இனப் பிரச்சினையில் அவர்களுக்கு முழுமையான ஈடுபாடு இல்லை என்பதையும் சுட்டிக் காட்டினோம். இலங்கையில் இன நல்லிணக்கத்துக்கான சூழல்களை ஏற்படுத்தும் வாய்ப்புகளை உருவாக்க இலங்கை அரசு தவறி விட்டதையும் எடுத்துரைத்தோம்..

இராணுவ நடவடிக்கைகள், நில அபகரிப்பு போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்தும் முழுமையாகப் பேசினோம். ௭ங்கள் கருத்துக்களை ஏற்றுக் கொண்ட அவர்கள், இது குறித்து இலங்கை அரசுடன் பேசியுள்ளனர். இது குறித்துப் பேச இலங்கை அரசின் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி.சில்வா தென்னாபிரிக்காவுக்கு பயணம் செய்ய உள்ளார். இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு பயணம் செய்ய ௭மக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்குப் பின்பு நாம் அங்குச் செல்ல உள்ளோம் ௭ன்றார் அவர்.

English summary
South Africa has offered to broker talks between the Tamil National Alliance and the Lankan government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X