For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி சென்றோரின் படகு கவிழ்ந்து விபத்து- 144 பேரின் கதி என்ன?

By Mathi
Google Oneindia Tamil News

சிட்னி: ஆஸ்திரேலியா நாட்டுக்கு புகலிடம் கோரிய சென்றோரின் மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது .கிறிஸ்துமஸ் தீவுக்கு அருகில் 150பேருடன் மூழ்கிய படகில் 6 பேர் மட்டுமே உயிர் தப்பியுள்ளனர். இதர 144 பேரின் கதி என்ன என்பது தெரியவிலை.

ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவுகளை நோக்கி புகலிடம் கோரி மீன்பிடிப் படகில் 150 பேர் பயணித்திருக்கின்றனர். இவர்கள் ஜாவா மற்றும் கிறிஸ்துமஸ் தீவுகளிடையே சென்று கொண்டிருந்த போது அந்த மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தப் படகில் இருந்தோரில் 6 பேர் மட்டும் பெரும்போராட்டத்துடன் கடலில் நீந்தி அந்த வழியே சென்று கொண்டிருந்த கப்பல் ஒன்றிடம் தகவல் தெரிவித்துள்ளனர். தப்பிப் பிழைத்து தகவல் தெரிவித்தவர்களில் ஒருவர் ஆப்கானைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து கடலில் மூழ்கியோரைத் தேடும் பணியில் ஆஸ்திரேலிய கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டனர். இருப்பினர் படகில் பயணம் செய்த எவரையும் இதுவரை மீட்கவில்லை. இதனால் 144 பேரின் கதி என்ன என்று தெரியவில்லை.

கடந்த டிசம்பர் முதல் 300 புகலிடக் கோரிக்கையாளர்கள் இதேபோல் ப்ஆபத்தான படகு பயணம் மேற்கொண்டு கடலில் மூழ்கி உயிரிழந்திருக்கின்றனர்.

English summary
GRAVE fears are held for up to 144 asylum-seekers missing from a boat believed to have sunk off Indonesia, as six survivors were plucked from the ocean.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X