For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெட்ரோல் விலை அடுத்த வாரம் உயர்த்தப்படுகிறது?

By Mathi
Google Oneindia Tamil News

Petrol price,
டெல்லி: மத்திய அமைச்சர்கள் குழு கூட்டத்துக்கு பின்னர் அடுத்தவாரம் பெட்ரோல் விலை உயர்த்தப்படும் என்று பெட்ரோலிய துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி அறிவித்துள்ளார்..

இது தொடர்பாக ஜெய்பால் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பெட்ரோல் உள்ளிட்ட பல்வேறு பெட்ரோலிய பொருட்களின் விலையை உடனடியாக உயர்த்தும் திட்டம் அரசிடம் இல்லை. ஆனால் இதுவரை எதிர்பார்க்காத அளவுக்கு ஆபத்தான நிலையை, அழுத்தத்தை எதிர்கொண்டு வருகிறோம். பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தாவிட்டால் நமது பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு நஷ்டம் அடையும். இந்த பற்றாக்குறையை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துத்தான் ஆக வேண்டியுள்ளது. அந்த வகையில் சில கடினமான, வேதனையான முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளது. பெட்ரோலிய பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வதில், பொருளாதாரத்தை அரசியல் தோற்கடித்து விடுகிற அபூர்வ நிகழ்வு நடந்துகொண்டிருக்கிறது. எண்ணெய் துறையில், மிகவும் ஆபத்தான கட்டத்தில் நாம் இருப்பதை அரசியல் விவகாரங்களுக்கான மந்திரிகள் குழுமுன் வைக்க வேண்டியது எனது கடமை ஆகும் என்றார்

இதற்கிடையே இந்திய எண்ணெய் கழகத்தின் தலைவர் ஆர்.எஸ்.புட்டோலா கூறுகையில், "ஒரு நாளைக்கு பெட்ரோல் விற்பனை மூலம் எங்களுக்கு ரூ.16 கோடி இழப்பு ஏற்படுகிறது. பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. மற்ற கம்பெனிகளுடனும், அரசுடனும் கலந்து பேசி முடிவு எடுப்போம்'' என்றார்.

English summary
The government may hike petrol, diesel, cooking gas and kerosene prices simultaneously as early as next week, with Oil Minister S Jaipal Reddy today saying "difficult and painful" decisions need to be taken.
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X