ஜெ. உருவாக்கும் சிறப்புக் காவல் இளைஞர் படை.. ஆண்டுக்கு 50,000 பேருக்கு வேலை!
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது குறுக்கிட்ட முதல்வர் அவை விதி எண் 110ன் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி, சிறப்புக் காவல் இளைஞர் படை உடனடியாக உருவாக்கப்படும். ஆண்டுக்கு 50,000 பேர் இந்தப் படையில் சேர்க்கப்படுவர்.
இவர்கள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், இரவு ரோந்துப் பணியில் ஈடுபடுதல், ஓட்டுநர் பணியைச் செய்தல், கோர்ட் உத்தரவுகளை வாங்கி சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள், எஸ்பி அலுவலகங்கள், கமிஷனர் அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் ஒப்படைத்தல் உள்ளிட்ட பணிகளைச் செய்வார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications