புலிகள் தளபதி விநாயகம் கைது செய்யப்படவில்லை! - பிரெஞ்ச் போலீஸ்

விடுதலைப் புலிகளின் முத்த தளபதி பரிதி படுகொலை தொடர்பாக விநாயகம் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளில் எந்த வித உண்மையும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
தளபதி பரிதி படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த கொலையில் புலிகள் அமைப்பைச் சேர்ந்த சிலரை தொடர்புபடுத்தி செய்தி வெளியானது.
இதற்கு விளக்கமளித்திருந்த விடுதலைப் புலிகள் அமைப்பு, "பரிதி அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தோடு எமது அமைப்பைத் தொடர்புபடுத்தி சில விஷமிகளால் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சார்ந்த எவருமே இக்கொலையோடு தொடர்புபடவில்லை என்பதையும் எமது அமைப்பைச் சேர்ந்த எவருமே பிரான்சில் கைது செய்யப்படவில்லை என்பதையும் தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாம் தெளிவுபடுத்துகின்றோம்," என தலைமைச் செயலக அறிக்கை தெரிவித்தது.
இந்த சூழலில்தான் புலிகள் அமைப்பின் முக்கிய தளபதியான விநாயகத்தை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்ததாக தகவல் வெளியானது.
இது பரிதியின் படுகொலையை வைத்து பரபரப்பு ஏற்படுத்தும் நோக்கில் உண்மைக்கு புறம்பாக வந்துள்ள செய்தி என புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரெஞ்ச் போலீசும் இதனை மறுத்துள்ளது.
-
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications