For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கசாப் தூக்கு தாமதமானாலும் நல்ல நிகழ்வு; அப்சல் குருவுக்கு எப்போ?: பாஜக

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: மும்பை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டதற்கு பாரதீய ஜனதா கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. அதேசமயம் பாராளுமன்றம் மீது தாக்குதல் நடத்திய அப்சல்குருவின் தூக்கு தண்டனையை உடனே நிறைவேற்றவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. அஜ்மல் கசாப் தூக்கில் இடப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ஷா நவாஸ் உசேன், கசாப் தூக்கிலிடப்பட்ட சம்பவம் தாமதமானாலும் நல்ல நிகழ்வு என்றார்.

தீவிரவாதிகளின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மும்பைவாசிகளின் ஆறாத காயங்களுக்கு மருந்தாக இந்த தூக்கு தண்டனை அமைந்துள்ளது. இதேபோல் பாராளுமன்றம் மீது தாக்குதல் நடத்திய அப்சல் குருவையும் உடனடியாக தூக்கிலிட வேண்டும். இதன்மூலம் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோருக்கு ஒரு அழுத்தமான செய்தியை நாம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

கசாப்பை தூக்கிலிட்டது நமது நாட்டுக்கு வெளியே இருக்கும் அவனது எஜமானர்களுக்கு எச்சரிக்கையாகவும், பாடமாகவும் அமையும் என்று பா.ஜ.க. துணை தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார். கசாப்பை தூக்கிலிட்டதன் மூலம் இந்தியாவின் எதிரிகளுக்கு வலிமையான செய்தி அனுப்பப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று ரத்தக்கறை படிந்த கரங்களுக்கு சொந்தக்காரர்களான தீவிரவாதிகளுக்கு இதை போன்ற தண்டனையை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றார்கள் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அப்சல் குருவிற்கு தண்டனை

கடந்த 2001-ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி, பாராளுமன்றம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு திடீர் தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் தீவிரவாதிகள் 5 பேரும் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். 5 போலீசார், பாராளுமன்ற காவலாளி, பாராளுமன்ற தோட்டக்காரர் உள்பட 7 பேர் இந்த தாக்குதலில் உயிரிழந்தனர். 18 பேர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டி, மூளையாக செயல்பட்ட அப்சல் குரு உள்ளிட்ட சிலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மரண தண்டனையை எதிர்த்து அப்சல் குரு தாக்கல் செய்த மேல் முறையீடுகளும், ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.

2008ம் ஆண்டு நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதி அஜ்மல் கசாப்புக்கு இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்ற தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் இட வேண்டும் என பா.ஜ.க. வற்புறுத்தி உள்ளது.

English summary
BJP on Wednesday welcomed the hanging of 26/11 attack convict Ajmal Kasab but emphasised that his handlers across the border in Pakistan should also be brought to justice.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X