For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கசாபை தூக்கில் போடுவது பிரதமருக்கே தெரியாது; சோனியாவுக்கும் தெரியாது.. சொல்கிறார் ஷிண்டே

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப்பை தூக்கிலிடுவது பற்றி பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் மத்திய அமைச்சர்கள் எவருக்கே தெரிவிக்கவில்லை என்று உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறியுள்ளார்.

கசாப் தூக்கிலிடப்பட்டது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கசாப்பை தூக்கில் போடுவதை திட்டமிட்டே ரகசியமாக வைத்தோம். தூக்கில் போடும் தேதியை பகிரங்கப்படுத்தியிருந்தால் தீவிரவாத இயக்கங்கள் தாக்குதல்களில்கூட ஈடுபடலாம். பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா உடபட யாரிடமும் தெரிவிக்கவில்லை. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் உள்துறை அமைச்சராகிய எனக்கு மட்டுமே தெரியும். மன்மோகன்சிங்கும் சோனியா காந்தியும் தொலைக்காட்சி மூலமே தெரிந்து கொண்டனர்.

மத்திய அரசை பொறுத்தவரை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் உள்துறை மந்திரி என்ற அளவில் மட்டுமே இந்த தகவல் தெரியும். கசாப் தூக்கிலிடப்பட்ட விஷயத்தை தொலைக்காட்சி செய்திகள் மூலம்தான் மன்மோகன்சிங்கும், சோனியாவும் தெரிந்து கொண்டனர். இப்படி ரகசியமாக வைத்திருக்க நான் காவல்துறையில் இருந்தபோது பயிற்சியெல்லாம் கூட பெற்றிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

மிஸ்டர் ஷிண்டேஜி,, இது உங்க வீட்டு சமாச்சாரம் இல்ல.. ரகசியம் காக்க... நாட்டோட சமாச்சாரம்...நாட்டோட பிரதமருக்கே சொல்லாமல் செய்தோம் என்பது பெருமிதம் அல்ல.. வெட்கக் கேடு! பிரதமர் பதவியையே அவமதிக்கிறீர்கள் என்பது புரியவில்லையோ! என்பது மக்களின் குரல்!

English summary
No one from the Union Cabinet or even United Progressive Alliance (UPA) chairperson Sonia Gandhi were kept in the loop about Ajmal Kasab's scheduled hanging on Wednesday morning. Only President Pranab Mukherjee and the home ministry knew of the decision, according to home minister Sushil Kumar Shinde.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X