For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட 5.3 சதவீதமாக குறைந்துவிட்டது: ப.சிதம்பரம்

By Chakra
Google Oneindia Tamil News

P Chidambaram
டெல்லி: இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட குறைந்துவிட்டது என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

இந்த நிதியாண்டில் ஜூலை-செப்டம்பர் இடையிலான இரண்டாம் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.3 சதவீதமாக சரிந்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் வரையிலான முதல் காலகட்டத்தில் வளர்ச்சி 5.5 சதவீதமாக இருந்தது. ஆனால், 2வது காலாண்டில் 0.1 சதவீதம் குறைந்து, 5.3 சதவீதமாக சரிந்துள்ளது.

இது குறித்து ப.சிதம்பரம் கூறுகையில்,

அதே போல கடந்த ஆண்டு இதே காலாண்டில் 3.1 சதவீதமாக இருந்த விவசாயத்துறை துறை உற்பத்தி, இந்த ஆண்டில் வெறும் 1.2 சதவீதமாக குறைந்துள்ளது. மழையளவு சராசரியைவிட குறைந்ததால் விவசாயத்துறை வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. அதே போல உற்பத்தி துறையிலும் மோசமான நிலை நிலவுகிறது. இவை தான் நாட்டின் பொருளாதார சரிவுக்குக் காரணம்.

குறிப்பாக ஜூன்-ஜூலை மாதத்தில் வழக்கத்தைவிட குறைவான மழை பெய்திருக்கிறது. இதனால் காரிப் பருவத்தில் உற்பத்தி பாதித்ததால், பொருளாதார வளர்ச்சியை சரிவடைய செய்து விட்டது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 2.9 சதவீதமாக இருந்த தொழில் வளர்ச்சி விகிதம் இந்த ஆண்டு வெறும் 0.8 சதவீதம் என்ற நிலையில் தான் இருந்தது என்றார்

English summary
Terming the second quarter economic growth rate of 5.3 per cent as "below expectations", Finance Minister P Chidambaram today said it was mainly due to scanty rainfall and poor showing by the manufacturing sector. "Overall, the growth rate is below our expectations," Chidambaram said in a statement after the official data showed that GDP growth fell to 5.3 per cent in July-September period.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X