கூடங்குளம் அணு உலைக்கு எதிராக மீண்டும் போராட்டம்- டிச.10ல் கடல்வழி முற்றுகை!!
Subscribe to Oneindia Tamil

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கடந்த ஓராண்டு காலமாக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடல் வழி முற்றுகை, கடலுக்குள் இறங்கி போராட்டம் என பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் பலர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்திருக்கிறது. இதுஒருபுறமிருக்க சட்டரீதியான போராட்டங்களும் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இன்று கூடங்குளம் இடிந்தகரை கிராமத்தில் இன்று கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாளை மறுநாள் 10-ந் தேதியன்று கடல்வழி முற்றுகைப் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications