For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

45 ஆண்டுகளுக்குப் பிறகு தாய் மண்ணில் ஹமாஸ் இயக்க தலைவர்..

By Mathi
Google Oneindia Tamil News

Khaled Meshaal
காசா: பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செல்வாக்குடன் இருக்கும் ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் கலீத் மிஷால் 45 ஆண்டுகாலத்துக்குப் பிறகு தாயகம் திரும்பியிருக்கிறார்.

பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையேயான எல்லைப் பகுதியான மேற்குக் கரையின் சில்வாட்டில் 1956-ம் ஆண்டு பிறந்தவர் கலீத் மிஷார். 1967 காசாவில் இஸ்ரேல் நடத்திய ஆக்கிரமிப்புப் போரின் போது குடும்பத்தாருடன் குவைத்துக்கு அகதியாக சென்றார்.

1971-ல் முஸ்லிம் சகோதரர்கள் என்ற அமைப்பில் இணைந்து 1987-ம் ஆண்டு ஹமாஸ் இயக்கத்தைத் தொடங்கினார் கலீத். 1990களில் குவைத்தை ஈராக் கைப்பற்றிய போது ஜோர்டான் சென்றார். அங்கு அவரைக் கொலை செய்ய இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாத் திட்டம் தீட்டியது. பின்னர் 2001-ல் கத்தாருகு இடம்பெயர்ந்தார். அதன் பின்னர் சிரியாவில் தஞ்சமடைந்தார்.

அகதி வாழ்க்கை வாழ்ந்தாலும் தாயகத்தில் ஹமாஸ் இயக்கத்தை வீச்சோடு வழிநடத்தி வந்தார் கலீத் மிஷால். இந்த இயக்கத்தின் 25ஆம் ஆண்டு விழாவையொட்டி தற்போது தமது தாயகத்துக்கு திரும்பியிருக்கிறார் அவர். எகிப்து எல்லை வழியாக காசா வந்தடைந்த அவர் எல்லையில் மண்டியிட்டு தாய் மண்ணை முத்தமிட்டார். அவரை காசா பிரதமர் இஸ்மாயில் ஹனியா கட்டித்தழுவி வரவேற்றார்.

English summary
Khaled Meshaal, political leader of Hamas, has reached the Gaza Strip, setting foot on Palestinian soil for the first time in 37 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X