For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார் மிஸ் யுஎஸ்ஏ: முதல் 10ல் கூட இந்தியா இல்லை

By Siva
Google Oneindia Tamil News

Miss US
லாஸ் வேகாஸ்: மிஸ் அமெரிக்கா ஒலிவியா கல்போ பிரபஞ்ச உலகியாக தேர்வாகியுள்ளார். இந்தியாவின் ஷில்பா சிங் முதல் 10 இடங்களில் கூட இல்லை.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் உள்ள பிளானட் ஹாலிவுட் கசினோவில் நேற்று மிஸ் யுனிவர்ஸ் அதாவது பிரபஞ்ச அழகி போட்டி நடந்தது. இந்த போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 89 அழகிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியை தொலைக்காட்சி மூலம் 180 நாடுகளைச் சேர்ந்த 1 பில்லியன் பேர் கண்டு மகிழ்ந்தனர்.

இதில் இந்தியாவைச் சேர்ந்த ஷில்பா சிங் கலந்து கொண்டார். ஷில்பா பட்டம் வென்று வருவார் என்று இந்தியர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். இந்நிலையில் மிஸ் அமெரிக்கா ஒலிவியா கல்போ மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார். ஷில்பா சிங்கால் முதல் 10 இடங்களில் கூட வர முடியவில்லை. பிலிப்பைன்ஸ் அழகி இரண்டாவது இடத்தையும், வெனிசுலா, ஆஸ்திரேலியா, பிரேசில் அழகிகள் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்தனர். சிறந்த தேசிய உடை பட்டத்தை சீன அழகி வென்றார்.

இந்தியா சார்பில் ஐ ஆம் ஷீ பட்டம் வென்ற உத்தரகண்டைச் சேர்ந்த ஊர்வசி ரவுடெலா தான் மிஸ் யுனிவர்ஸ் போட்டிக்கு அனுப்பப்படவிருந்தார். ஆனால் குறைந்தபட்ச வயது வரம்பான 18 வயதை அவர் அடைய 25 நாட்கள் குறைவாக இருந்ததால் ஷில்பா அவருக்கு பதிலாக அனுப்பப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

12 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2000ம் ஆண்டு லாரா தத்தா தான் கடைசியாக மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற இந்திய அழகியாவார்.

English summary
Miss US Olivia Culpo won the coveted Miss Universe 2012 title. India's Shilpa Singh failed to make it to the top 10 contestants.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X