பனிமூட்டம்… நேபாளத்தில் கிடுகிடு பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 30 பேர் பலி
காட்மண்டு: நேபாளத்தில் இன்று அதிகாலையில் மலைப்பகுதியில் சென்ற பேருந்து 600 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 30 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இமய மலையின் மீது அமைந்துள்ள நாடு நேபாளம். இன்று அதிகாலை நேரத்தில் டோட்டி மாவட்டத்தின் சத்திவான் கிராம மலைப்பகுதிக்கு 35 பேருடன் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. நடுவில் சில பயணிகள் ஏறிக்கொண்டனர். பனிமூட்டம் அதிகமா இருந்த காரணத்தால் பள்ளத்தாக்கு இருந்த பகுதி சரிவர தெரியவில்லை. திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து, 600 மீட்டர் செங்குத்தான பள்ளத்தாக்கிற்குள் பாய்ந்தது. இதில் 30 பேர் உயிரிழந்தனர். 12 பேர் பலத்த காயமடைந்தனர்.
மேலும் பலர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் தேடுதல் வேட்டையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நேபாளத்தில் மலைப்பாதைகள் சரிவர பராமரிக்கப்படாமல் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன. கடந்த 5 மாதங்களில் மட்டும் இரண்டு விபத்துக்கள் ஏற்பட்டு இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications