For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி இழப்பீடு கோரி தமிழக அரசின் வழக்கு - கர்நாடகா முதல்வர் கருத்து

By Mathi
Google Oneindia Tamil News

Jagadish Shettar
பெங்களூர்: காவிரியில் நீர் திறந்துவிடாததால் ஏற்பட்ட பாதிப்புக்கு இழப்பீடு கோரி தமிழக அரசு வழக்கு தொடர்ந்தால் உரிய பதிலளிப்போம் என்று கர்நாடகா முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறியுள்ளார்.

காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடாததால் ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கு கர்நாடக அரசு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் சிவில் வழக்கைத் தாக்கல் செய்ய தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று உத்தரவிட்டிருந்தார்.

இது தொடர்பாக ஹாவேரியில் கர்நாடகா முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கருத்து தெரிவிக்கையில், பயிர் பாதிப்பிற்கு இழப்பீடு கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அதற்கு கர்நாடகா தகுந்த பதில் அளிக்கும். கர்நாடகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை, வறட்சி ஆகியவை குறித்து காவிரி நதிநீர் ஆணையம் மற்றும் காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில் ஏற்கனவே விளக்கி கூறி இருக்கிறோம். காவிரி படுகையில் உள்ள பகுதிகள் ஏற்கனவே குடிநீர் பிரச்சினையை சந்தித்து வருகின்றன என்றார் அவர்.

English summary
Reacting to Tamil Nadu's new move on Cauvery row, Karnataka Chief Minister Jagadish Shettar said at Haveri in Karnataka that the state would reply to the petition.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X