For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

144 தடை விதிக்கும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளதா- கமல் தரப்பு கேள்வி

Google Oneindia Tamil News

Kamal
சென்னை: ஒரு படத்திற்கு தமிழகத்தின் 31 மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்கள். அப்படியென்றால் தமிழகம் முழுவதும் அந்த அளவுக்கு சட்டம் கெட்டுள்ளதா என்று கமல்ஹாசன் தரப்பு வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் கேட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.

விஸ்வரூபம் படத்திற்கு எதிரான தடை வழக்கில் இன்று கமல்ஹாசன் தரப்பு வழக்கறிஞர் பி.எஸ். ராமன் அரசுக்கு எதிரான கடுமையான வாதத்தை வைத்தார். இதை அரசுத் தரப்பே எதிர்பார்க்கவில்லை.

வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தனது வாதத்தின்போது, விஸவரூபம் படம் திட்டமிட்டபடி தமிழகத்தில் வெளியிடப்படாவிட்டால் ரூ. 80 கோடி அளவுக்கு கமல்ஹாசனுக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்படும்.

இப்படம் கேரளாவில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆந்திராவில் ஓடிக் கொண்டிருக்கிறது. பிறகு ஏன் தமிழகத்தில் மட்டும் வெளியிடக் கூடாது...

தமிழத்தில் ஒரு படத்தை எதிர்த்து மொத்தம் உள்ள 31 மாவட்டங்களிலும் 144 தடைச் சட்டத்தைப் பிரயோகித்துள்ளனர். அப்படியானால் ஒட்டுமொத்த தமிழகத்திலும் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய் உள்ளதா என்பதை அரசு விளக்க வேண்டும். அவ்வளவு மோசமாகவா உள்ளது சட்டம் ஒழுங்கு என்று கேட்டார்.

English summary
Actor Kamal Haasan's lawyer P.S.Raman posed a shocking question to the Advocate General on Viswaroopam ban.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X