For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆதீனத்திற்கு எதிரான நித்தியானந்தாவின் வழக்கு மதுரை கோர்ட்டில் தள்ளுபடி

Google Oneindia Tamil News

மதுரை: மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மீது நித்தியானந்தா தொடர்ந்த வழக்கை மதுரை கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது.

தமிழக இந்து அறநிலையத்துறை ஆணையர் தனபால், மதுரை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார். அதில், இந்து அறநிலையத்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் ஆதீனம் தரப்பில் மதுரை ஆதீனம் அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. ஆதீன மடத்தின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே மதுரை ஆதீனம் அருணகிரிநாதரை அந்த பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, அடுத்த ஆதீனம் நியமிக்கப்படும்வரை மடத்தின் பொறுப்புகளை இந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து அருணகிரிநாதர், அதே கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில், மதுரை ஆதீனம் அறக்கட்டளை கலைக்கப்பட்டுள்ளது. எனவே அந்த பெயரில் பதிவாளர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட பதிவை ரத்து செய்ய வேண்டும் என்றும், மதுரை ஆதீன மடத்தில் நித்தியானந்தாவும், அவருடைய தரப்பினரும் நுழைய நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நித்தியானந்தா, ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், மதுரை ஆதீனம் அறக்கட்டளையை நானும், அருணகிரிநாதரும் சேர்ந்து சட்டப்படி உருவாக்கினோம். அறக்கட்டளையை கலைக்க விரும்பினால் முதன்மை அரசு வக்கீலிடம் முன் அனுமதி பெற வேண்டும். அறக்கட்டளையில் உள்ள எனக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.

ஆனால், அதுபோன்று எந்தவித அனுமதியும் பெறாமல் அறக்கட்டளை கலைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கலைத்தது தவறு. சட்டப்படி அறக்கட்டளையை கலைக்காமல் அறக்கட்டளைக்கான பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று அருணகிரிநாதர் தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்கக்கூடாது. அந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதற்கு அருணகிரிநாதர் தாக்கல் செய்த பதில் மனுவில், சாதாரணமாக உருவாக்கப்படும் அறக்கட்டளைகளுக்குத்தான் நித்தியானந்தா கூறியுள்ள விதிமுறைகள் பொருந்தும். இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் மதுரை ஆதீனம் போன்ற மடங்களில் அமைக்கப்படும் அறக்கட்டளைகளை கலைக்க அந்த விதிகள் பொருந்தாது. எனவே சட்டப்படியான அடிப்படை காரணங்கள் இல்லாததால் நித்தியானந்தாவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுக்கள் நீதிபதி கே.குருவையா முன்பாக விசாரணைக்கு வந்தன. ஆதீனம் தரப்பில் வக்கீல் நாகேந்திரன், ராமமூர்த்தி ஆகியோர் ஆஜரானார்கள். முடிவில் ஆதீனம் மனுவை தள்ளுபடி செய்யக்கோரிய நித்தியானந்தாவின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

English summary
Madurai principal sessions court has dismissed Nithyanantha's petition against Madurai Aadheenam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X