For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தனி தெலுங்கானா கோரி 7 காங்கிரஸ் எம்.பிக்கள் நாளை ராஜினாமா

By Chakra
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: தனி தெலுங்கானா அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த 7 ஆந்திர மாநில காங்கிரஸ் எம்பிக்கள் தங்கள் பதவிகளை நாளை ராஜினாமா செய்யவுள்ளனர்.

தனித் தெலுங்கானா போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, ஜனவரி 28ம் தேதிக்குள் இதுபற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால், அந்த காலக்கெடுவுக்குள் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இதையடுத்து ஆத்திரமடைந்த தெலுங்கானா போராட்டக்காரர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். கொடுத்த வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்றாததால் அதிருப்தியடைந்த, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆந்திர எம்.பிக்கள் 7 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் எழுதியுள்ள சபாநாயகருக்கு எழுதியுள்ள ராஜினாமா கடிதங்களை நாளை காலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அளிக்க உள்ளனர்.

English summary
The Telangana crisis continues as seven Congress MPs from Andhra Pradesh have said that they will send their resignation letters to party President Sonia Gandhi on Wednesday. The MPs, after being summoned by the party high command, will land in Delhi on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X