For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் இருக்காது: ஈரான் அதிபர் எச்சரிக்கை

By Mathi
Google Oneindia Tamil News

Mahmoud Ahmadinejad
கெய்ரோ: எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானிய மக்கள் இஸ்ரேல் என்ற நாட்டையே இல்லாமல் செய்துவிடுவர் என்று அந்நாட்டு அதிபர் மஹமூத் அகமதிநிஜேத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எகிப்து தலைநகர் கெய்ரோவில் இஸ்லாமிய நாடுகளின் மாநாட்டுக்காக சென்ற மஹமூத் அகமதிநிஜேத் அந்நாட்டு செய்தி ஊடகங்களின் ஆசிரியர்களிடையே பேசுகையில், ஜியோனிஸ்டுகளின் நாடான இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்த உக்கிரம் காட்டி வருகிறது. ஆனால் ஈரானின் பதில் தாக்குதல்களை எண்ணி இஸ்ரேல் அச்சப்படுகிறது.

இஸ்ரேலின் எத்தகைய ஒரு தாக்குதலையும் எதிர்கொள்ள எங்கள் நாட்டுப் படைகள் தயாராக இருக்கின்றன. எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் என்ற நாட்டையே இல்லாமல் செய்து விடுவோம் என்றார்.

அண்மையில் இஸ்ரேல் அரசு, ஈரான் உலக நாடுகளின் அமைதிக்கு ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இஸ்ரேல் நாட்டுக்கு ஆபத்தாக இருக்கிறது என்று எச்சரித்திருந்த நிலையில் ஈரான் அதிபர் இத்தகைய பதிலடி கொடுத்திருக்கிறார்.

English summary
The Iranian people are ready to march on Israel to "wipe it out" if the Jewish state attacks the Islamic republic, President Mahmoud Ahmadinejad says in statements published by Egypt's state news agency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X