For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

1,25,000 புதிய விசாக்களை உருவாக்கும் அமெரிக்கா.... திறமையானவர்களை ஈர்க்கத் திட்டம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

அறிவியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்துறைகளில் சிறந்துவிளங்குவோருக்காக ஒரு லட்சத்து 25ஆயிரம் விசாக்களை உருவாக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் சட்ட மசோதா கொண்டுவந்துள்ளனர்.

இந்தியா, சீனா உள்ளிட்ட உலகம் முழுவதிலுமுள்ள வல்லுநர்களை ஈர்ப்பதற்காக அமெரிக்க அரசு கொண்டுவரும் இந்த சட்ட மசோதாவுக்கு மைக்ரோசாப்ட், கூகிள் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

சாதனை படைத்த தொழில்முனைவோர்கள் அமெரிக்காவுக்கு வந்தால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வாய்ப்பிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

பல துறைகளில் சிறந்துவிளங்கும் தொழில் முனைவோருக்கு 75 ஆயிரம் விசாக்களையும், அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித பட்டதாரிகளுக்காக 50ஆயிரம் விசாக்களையும் உருவாக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.

English summary
Named Startup Act 3.0, the bill, if approved, will lead to creation of nearly 125,000 high skilled US visas.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X