For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போட்டா போட்டி!: ரூ. 2,250க்கு 20 லட்சம் டிக்கெட்டுகள்: ஜெட் ஏர்வேஸ் 'டபுள் அதிரடி ஆபர்'!!!

By Chakra
Google Oneindia Tamil News

Jet Airways
மும்பை: ரூ.2,013 விலையில் 10 லட்சம் டிக்கெட்டுகளை ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் அதிரடி ஆபர் போட்டு விற்றுத் தீர்த்த நிலையில், அதற்குப் போட்டியாக தலா ரூ. 2,250 விலையில் 20 லட்சம் டிக்கெட்டுகள் டபுள் அதிரடி ஆபரை அறிவித்துள்ளது ஜெட் ஏர்வேஸ்.

ஜெட் ஏர்வேஸின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பங்குச் சந்தையின் அந்த நிறுவனத்தின் பங்குகளின் விலைகள் தடாலடியாக உயர்ந்தன.

பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை வழக்கமாக விமானப் பயணிகள் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும். இதைக் கருத்தில் கொண்டு பிப்ரவரி 1ம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதி வரையிலான பயணத்துக்கு 1 மில்லியன் (10 லட்சம்) டிக்கெட்டுகள் தலா ரூ. 2013க்கு விற்கப்படும் என்று சன் டிவி அதிபர் கலாநிதி மாறனின் ஸ்பைஸ் ஜெட் அறிவித்தது.

அதாவது 2013ம் ஆண்டைக் குறிக்கும் வகையில் இந்த ஆபரை ஸ்பைஸ் ஜெட் வெளியிட்டது. இந்த அறிவிப்பு வெளியான 3 நாட்களிலேயே ரூ. 160 கோடி மதிப்புள்ள டிக்கெட்களை ஸ்பைஸ் ஜெட் விற்றுத் தீர்த்தது. அதாவது, 10 லட்சம் டிக்கெட்களில் 7 லட்சம் டிக்கெட்டுகள் 3 நாட்களிலேயே விற்பனையாகிவிட்டன.

இந் நிலையில், நீங்கள் 10 லட்சம் டிக்கெட்டுகளைத் தானே தள்ளுபடியில் தருவீர்கள். நாங்கள் 20 லட்சம் டிக்கெட்டுகளைத் தருகிறோம் என்று ஏட்டிக்குப் போட்டியாக ஆபரை அறிவித்துள்ளது ஜெட் ஏர்வேஸ்.

ஜெட் ஏர்வேஸ் மற்றும் அதன் துணை நிறுவனமான ஜெட் கனெக்ட் ஆகியவற்றில் 20 லட்சம் டிக்கெட்டுகள் தலா ரூ. 2,250 விலையில் விற்கப்படவுள்ளன.

இந்த டிக்கெட்டுகளை வரும் டிசம்பர் 31ம் தேதி வரை பயன்படுத்தலாம். ஸ்பைஸ் ஜெட் பிப்ரவரி 1ம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதி வரையிலான பயணத்துக்கு மட்டுமே இந்த ஆபரைத் தந்தது. ஆனால், ஜெட் கிட்டத்தட்ட அடுத்த 10 மாதங்கள் வரை பயன்படுத்தும் வகையில் ஆபரை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று முதல் (பிப்ரவரி 19) முதல் வரும் 24ம் தேதிக்குள் இந்த டிக்கெட்டுகளை புக் செய்யலாம். இந்த டிக்கெட்கள் மூலம் உள்நாட்டு விமானங்களில், எக்கனாமிக் கிளாஸில் பயணிக்கலாம். டிசம்பர் 31ம் தேதி வரை இந்த டிக்கெட்டுகள் செல்லும்.

57 நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் 450 தினசரி விமானங்களுக்கு இது பொறுந்தும்.

ஜெட் ஏர்வேஸின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பங்குச் சந்தையின் அந்த நிறுவனத்தின் பங்குகளின் விலைகள் தடாலடியாக உயர்ந்தன.

தொடர்பான செய்தி: ரூ.2013க்கு 10 லட்சம் டிக்கெட்டுகள்.. ஸ்பைஸ் ஜெட் அதிரடி ஆபர்.. விற்றுத் தீர்ந்த 7 லட்சம் டிக்கெட்டுகள்!

English summary
Jet Airways on Tuesday launched "India's biggest air ticket sale," an offer that sent its share prices up after recent reverses. On offer are 20 lakh seats in over 450 daily flights across 57 cities within India, the company said. Tickets on Jet Airways and JetKonnect flights start at Rs. 2,250, according to the company's website. Jet is India's second largest carrier after unlisted Indigo. Jet's offer comes a month after budget carrier SpiceJet announced a similar sale that turned out to be successful. SpiceJet offered 10 lakh seats at an all-inclusive fare of Rs. 2,013 for any local flight between February 1 and April 30, booked till January 13. The offer is valid for the economy class and in domestic flights. The offer is open from February 19, 2013 to February 24, 2013 (both days inclusive). Travel must commence on or before December 31, 2013.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X