For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீண்டும் 'திவால்' ஆன ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிக்கை!

By Chakra
Google Oneindia Tamil News

Reader's Digest parent company files for bankruptcy again
நியூயார்க்: ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிக்கை நிறுவனம் திவால் ஆகிவிட்டதாக அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் மிகப் பிரபலமான இதழ் ரீடர்ஸ் டைஜஸ்ட். வாசகர்கள் எழுதும் கட்டுரைகளையே அடிப்படையாக வைத்து நடத்தப்படும் இதழ் இது.

இந்த இதழை ஆர்டிஏ ஹோல்டிங் கம்பெனி என்ற நிறுவனம் நடத்தி வருகிறது. ஆனால், இதழின் விற்பனை சரிந்ததாலும் விளம்பரங்கள் குறைந்துவிட்டதாலும் பெரும் நஷ்டத்தை இந்த நிறுவனம் சந்தித்து வருகிறது.

இதையடுத்து திவால் ஆகிவிட்டதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்க திவால் நீதிமன்றத்தில் இந்த அறிவிப்பை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளதால், அதற்கு சில நிதியுதவிகள் கிடைப்பதோடு, இந்த கடன்கள் மீதான வட்டி நெருக்கடியும் குறையும்.

கடந்த 4 ஆண்டுகளில் இந்த நிறுவனம் திவால் ஆகிவிட்டதாக அறிவிப்பது இது இரண்டாவது முறையாகும்.

கடந்த 2009ம் ஆண்டும் இதே போன்ற திவால் நிலைமை இந்த நிறுவனம் சந்தித்தது. ஆனால், 2010ம் ஆண்டில் நிதி நெருக்கடியில் இருந்து மீண்டு வந்தது. இந் நிலையில் மீண்டும் திவால் ஆகியுள்ளது.

இப்போது 534 மில்லியன் டாலர் அளவுக்கு கடன் நெருக்கடியில் இந்த நிறுவனம் உள்ளது. திவால் ஆகிவிட்டதாக அறிவித்துள்ளதால், அதன் 464.4 மில்லியன் டாலர் அளவுக்கான கடன்கள் பங்குகளாக மாற்றப்பட்டுவிடும். இதன்மூலம் அதன் கடன் அளவு 70 மில்லியன் டாலர் அளவாகக் குறையும். இதன்மூலம் 4 மாதங்களில் கடன்களில் இருந்து வெளியே வந்து நிறுவனமும் தப்பிவிடும்.

டிவிட் வாலாஸ் மற்றும் அவரது மனைவி லிலா அசெசன் ஆகியோர் இணைந்து 1922ம் ஆண்டு இந்த இதழைத் துவக்கினர். இப்போது இந்த நிறுவனத்துக்கு 1 பில்லியன் அளவுக்கு சொத்துக்கள் உள்ளன.

English summary
The owner of magazine Reader's Digest, once the staple of doctors' offices and coffee tables, has filed for bankruptcy for the second time in less than four years, citing a greater-than-expected decline of the media industry. RDA Holding Co and more than two dozen affiliates filed for a pre-negotiated Chapter 11 bankruptcy plan the company says will allow it to reduce its $534 million debt load by 80 percent, according to documents filed Sunday in US Bankruptcy court in the Southern District of New York. Its international operations are not part of the filing. It is the second time the company filed for bankruptcy protection since 2009.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X