For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரயில்வே பட்ஜெட் இல்லை ரேபரேலி பட்ஜெட்: பா.ஜ.க: பி.எஸ்.பி, எஸ்.பி கட்சிகள் புறக்கணிப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Pawan Kumar Bansal
டெல்லி:இந்த ரயில்வே பட்ஜெட் ரேபரேலி பட்ஜெட் என்று மத்திய ரயில்வே பட்ஜெட்டினை பாஜக வர்ணித்துள்ளது.

மத்திய ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் இன்று நாடாளுமன்ற மக்களவையில் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க முக்கிய அம்சங்கள் எதுவுமில்லை என்று எதிர்கட்சியான பாஜக மற்றும் காங்கிரசுக்கு இணக்கமான சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் பார்ட்டி கட்சிகள் தெரிவித்துள்ளன.

ரேபரேலி பட்ஜெட்

பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடைபெறும் மாநிலங்கள் பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று பாரதீய ஜனதா கூறியுள்ளது. மேலும் ரயில்வே பட்ஜெட்டை பாரதீய ஜனதா ரேபரேலி பட்ஜெட் என்று கூறியுள்ளது.

உ.பி புறக்கணிப்பு

இதனிடையே ஆளும் காங்கிரஸ் அரசுக்கு இணக்கமாக செயல்பட்டு வரும் முலாயம் சிங்கின் சமாஜ்வாடி, மாயாவதியில் பகுஜன் சமாஜ்பார்ட்டி போன்ற கட்சிகள் இந்த ரயில்வே பட்ஜெட்டினை புறக்கணித்துள்ளன.

உத்திரபிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்கான திட்டங்கள் எதுவும் இந்த ரயில்வே பட்ஜெட்டில் இல்லை என்று அந்த கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

English summary
Key outside UPA allies Samajwadi Party and Bahujan Samaj Party on Tuesday slammed the Rail Budget, saying it was anti-poor and ignored areas of Uttar Pradesh which need rail infrastructure for economic development.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X