For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொல்கத்தா காய்கறிச் சந்தையில் தீ: 18 பேர் பலி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Fire
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள காய்கறிச் சந்தையில் இன்று காலை நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமாயின.

கொல்கத்தாவின் சீல்டா பகுதியில் இருக்கும் சூர்யாசென் காய்கறி மார்க்கெட்டில் இன்று காலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் மார்க்கெட்டில் இருந்த பலரும் சிக்கிக் கொண்டனர். தீயில் சிக்கி 4 பேர் பலியானதாக முதலில் தகவல் வெளியாகியுள்ளது. இப்போது பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் காய்கறி மார்க்கெட்டில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

சம்பவ இடத்துக்கு 25 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. விபத்தில் படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தீவிபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமடைந்துள்ளதாக தெரிகிறது. தீ விபத்திற்கான காரணம் பற்றி தகவல் எதுவும் வெளியாகவில்லை.

English summary
A major fire broke out at a six-storey market complex in Kolkata early this morning killing at least four people and injuring many others. According to reports, 30 to 40 people are still feared trapped inside the market. Six others who were critically injured have been rushed to a nearby hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X