For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐரோப்பிய யூனியனை மூலம் இந்தியாவை மிரட்டும் திமிர் பிடித்த இத்தாலி...!

Google Oneindia Tamil News

பிரஸ்ஸல்ஸ்: ஐரோப்பிய யூனியனை விட்டு இந்தியாவை மிரட்ட ஆரம்பித்துள்ளது இத்தாலி. தனது நாட்டு கடற்படை வீரர்களை திரும்ப அனுப்ப முடியாது என்று கூறியதற்காக, தனது நாட்டுத்தூதரை இந்தியா வெளியேற விடாமல் தடுத்து வருவதால் இத்தாலிக்காக, ஐரோப்பிய யூனியன் இந்தியாவை மிரட்டியுள்ளது.

தெளிவான கொள்கை, உறுதியான நடவடிக்கை என்று எதுவுமே இல்லாமல் உப்புச் சப்பில்லாமல், உறுதியில்லாமல், செயல்பட்டு வரும் மத்திய அரசால் இந்தியா பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்தியாவை வெகு அழகாக ஏமாற்றி விட்டு நாடு திரும்பி விட்ட தனது நாட்டு கடற்படை வீரர்கள் இருவரையும் திரும்ப அனுப்ப முடியாது என்று கூறி விட்டது இத்தாலி.

இதனால் கடுப்பான இந்தியா, இத்தாலி நாட்டுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தது. சுப்ரீம் கோர்ட்டும் மறுஉத்தரவு வரும் வரை இத்தாலி தூதர் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. இதனால் இத்தாலிக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இத்தாலிக்கு ஆதரவாக ஐரோப்பிய யூனியன் களம் இறங்கியுள்ளது. அந்த அமைப்பின் வெளியுறவுக் கொள்கைக்கான தலைவரான காத்தரின் அஷ்டன் என்பவர் பேசுகையில், இத்தாலி நாட்டுத் தூதரை இந்தியாவை விட்டு வெளியேறக் கூடாது என்று தடுத்திருப்பது தவறானதாகும். இது கவலை தருகிறது. இந்த நடவடிக்கையானது வியன்னா உடன்படிக்கையை மீறும் செயல். உடனடியாக இந்த செயலை இந்தியாநிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் காத்தரின்.

English summary
European Union foreign policy chief Catherine Ashton on Tuesday defended Italy's envoy to India, prevented from leaving the country due to a row over two Italian marines who skipped bail while on trial for murder in New Delhi. A statement from Ashton's office said she "notes with concern" an Indian Supreme Court decision the previous day requiring ambassador Daniele Mancini to seek permission of the court to leave the country
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X