For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாகிஸ்தானில் முதல் முறையாக எம்.பியாகும் ஆர்வத்தில் 2 பழங்குடியின பெண்கள் வேட்பு மனு தாக்கல்

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் போட்டியிடுவதற்காக முதன் முறையாக 2 பழங்குடியின பெண்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் வரும் மே மாதம் 11ம் தேதி நடைபெற உள்ளது. பஞ்சாப், சிந்த், கைபர், பக்துன்குவா, பலூசிஸ்தான் ஆகிய 4 மாகாண சபைகளுக்கும் இதே நாளில் தேர்தல் நடைபெறுகிறது. 342 தொகுதிகளை கொண்ட பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக 2 தொகுதிகளில் பழங்குடியின பெண்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். பழமைவாத பழக்க வழக்கங்களில் இருந்து விடுபட மறுக்கும் பழங்குடியினத்தில் பிறக்கும் பெண்களுக்கு ஓட்டு போடும் உரிமை கூட அவர்களின் குடும்பத்தாரால் மறுக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்த கட்டுப்பாடுகளை எல்லாம் கடந்து 2 பழங்குடியின பெண்கள் எம்.பி.யாகும் ஆர்வத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பதாம் சரி என்ற பெண் பஜவுர் பழங்குடி மாவட்டத்தில் நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெரிக்-இ-இன்சாப் கட்சியால் சீட் மறுக்கப்பட்ட அக்கட்சியின் லோவர் டிர் பழங்குடியின மாவட்ட துணை தலைவர் நுஸ்ரத் பேகம் லோவர் டிர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

English summary
Two women from Pakistan's restive northwest have made history by becoming the first tribal women to file nomination papers for the May 11 parliamentary polls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X