For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீரழியும் சிறார்கள்... தொடக்கப் பள்ளியிலேயே ஆபாசத்திற்கு அடிமையாகும் அவலம்!

Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்தில் தொடக்கப் பள்ளியில் படிக்கும் சிறார்கள் பெருமளவில் இன்டர்நெட் ஆபாசத்திற்கு அடிமையாகி வருவதாக புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆண்டுதோறும் தொடக்கப் பள்ளி சிறார்கள் 3000 பேர் இன்டர்நெட்டில் ஆபாசப் படம் பார்த்தும், ஆபாச நிகழ்ச்சிகளைப் பார்த்தும் சிக்கி பள்ளிகளை விட்டு வெளியேற்றப்படும் நிலை உள்ளதாம்.

எதிர்பார்த்ததை விட டீன் ஏஜ் வயதிலும், அதற்கு முந்தைய வயதிலும் பெருமளவிலான சிறார்கள் ஆபாசத்திற்கு அடிமையாகியிருப்பதாகவும் இதுதொடர்பான ஆய்வில் ஈடுபட்ட அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

தினசரி 15 பேர்

தினசரி 15 பேர்

இங்கிலாந்து பள்ளிகளைப் பொறுத்தவரை சராசரியாக ஒவ்வொரு நாளும் 15 சிறார்கள், செக்ஸ் தொடர்பான புகார்களில் சிக்கி பள்ளிகளை விட்டு நீக்கப்படுகிறார்களாம்.

15 பேரில் ஒருவர் தொடக்கப்பள்ளி மாணவர்

15 பேரில் ஒருவர் தொடக்கப்பள்ளி மாணவர்

இந்த 15 பேரில் குறைந்தது ஒருவர் தொடக்கப்பள்ளி மாணவராக இருக்கிறாராம்.

ஆண்டுதோறும் 3000 பேர்

ஆண்டுதோறும் 3000 பேர்

செக்ஸ் சேஷ்டைகள், பாலியல் அத்துமீறல்கள், தொந்தரவு புகார்கள் காரணமாக ஆண்டுதோறும் 3000 சிறார்கள் பள்ளிகளை விட்டு டிஸ்மிஸ் செய்யப்படுகிறார்களாம்.

எஸ்.எம்.எஸ்.தான் மகா மோசம்

எஸ்.எம்.எஸ்.தான் மகா மோசம்

சிறார்களைப் பொறுத்தவரை அவர்கள் எஸ்.எம்.எஸ்.மூலம்தான் பெருமளவில் பாலியல் சேஷ்டைகளில் ஈடுபடுகிறார்களாம். கூடப் படிக்கும் மாணவிகளுக்கு செக்ஸியான எஸ்.எம்.எஸ். அனுப்புவது, படம் அனுப்புவது ஆகியவைதான் அவர்கள் செய்யும் பெரிய சேஷ்டைகளாகும்.

பிளேபாய்க்கும் ரசிகர்கள்

பிளேபாய்க்கும் ரசிகர்கள்

சிறார்களில் பெரும்பாலானோர் பிளேபாய் பத்திரிக்கையை படிக்கும் பழக்கம் உடையவர்களாக உள்ளனராம். பிளேபாய் பத்திரிக்கையில் வரும் படங்களை கத்தரித்து பென்சில் பாக்ஸில் வைப்பது, நோட்டுப் புத்தகத்தில் ஒட்டுவது ஆகிய பழக்கங்களில் ஈடுபடுகிறார்களாம். பெரும்பாலும் அவை நிர்வாணப் படங்களாகும்.

இங்கிலாந்தில் மட்டுமல்ல உலகம் பூராவும் இதே பிரச்சினைதான். பெற்றோர்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சமூகத்தையும் கவலைக்குள்ளாக்கி வருகிறது இந்தப் பிரச்சினை என்பதில் சந்தேகமில்லை.

English summary
Fifteen children are expelled from school for sexual misconduct on average every day. At least one of these will be from primary school, official figures show. More than 3,000 children are excluded every year for offences including sexual bullying, sexual assaults and harassment. The revelation comes amid increasing concern over the prevalence of ‘sexting’, when boys share explicit pictures of girls, often leaving the victims feeling suicidal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X