For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காங்கிரஸை எதிர்ப்பவர்களை அரசு சிறைக்கு அனுப்பும்: முலாயம் சிங் யாதவ் தாக்கு

By Siva
Google Oneindia Tamil News

Mulayam Singh yyadav
லக்னோ: காங்கிரஸ் கட்சியை எதிர்ப்பது அவ்வளவு சுலபம் அல்ல. ஏனென்றால் அது தன்னை எதிர்க்கும் யாரை வேண்டும் ஆனாலும் சிறைக்கு அனுப்பும் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

காங்கிரஸை எதிர்ப்பது எளிதல்ல. அப்படியே எதிர்த்தால் அவரை சிபிஐ துரத்தும். மத்திய அரசுக்கு ஆயிரம் கைகள் உள்ளன. அது சிபிஐயை பயன்படுத்தி யாரை வேண்டுமானாலும் சிறையில் தள்ளும் என்றார்.

சிபிஐயை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது என்று முலாயம் ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வகுப்பு வாத சக்திகள் ஆட்சிக்கு வந்துவிடாமல் இருக்கவே தனது கட்சி ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை ஆதரிப்பதாக முலாயம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராஷித் அல்வி கூறுகையில், முலாயம் சிங்ஜி ஏன் இவ்வாறெல்லாம் பேசுகிறார் என்று தெரியவில்லை. காங்கிரஸ் கட்சி சிபிஐயை கட்டுப்படுத்தவில்லை என்றார்.

English summary
Samajwadi Party supremo Mulayam Singh Yadav told that it is not easy to fight congress, as the government can use CBI and send the opposers to jail.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X