For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கனவுல ஹன்ஸிகாவுடன் கூட டான்ஸா??... மெஷின் கண்டுபிடிச்சுரும், உஷார்!

Google Oneindia Tamil News

டோக்கியோ: பெண் மனசு ஆழமுன்னு... அந்த ஆழத்திலே என்ன உண்டு யாருக்கு தான் தெரியும்'னு வருத்தப்பட்ட ராஜ்கிரண் அவர்களே, உங்களுக்கு ஓர் நற்செய்தி....

ஒருவருடைய மனதில் இருப்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்பார்கள். குறிப்பாக பெண்களின் மனதில் இருப்பதை கண்டுபிடிக்கவே முடியாது என்றும் கூறுவார்கள். ஆனால் தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள் விஞ்ஞானிகள்.. அதாவது மனதில் நினைப்பதைக் கண்டறியும் கம்ப்யூட்டர் வந்து விட்டது.

ட்ரீம் கேட்சர்....

கனவைக் கண்டுபிடிக்கும் கருவியாக இதை வர்ணிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

உள்ளதை உள்ளபடி காட்டும் காலக்கண்ணாடியா..?

உள்ளதை உள்ளபடி காட்டும் காலக்கண்ணாடியா..?

இந்த கம்ப்யூட்டரில் செய்யப்பட்டுள்ள புரோகிராமானது, நாம் மனதில் நினைப்பதை கண்டுபிடித்து விடுகிறதாம். இது கிட்டத்தட்ட 60 சதவீதம் சரியாக இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

கனவுத்தொழிற்சாலை தான் இந்த கனவு மிஷினுக்கு காரணமாம்....

கனவுத்தொழிற்சாலை தான் இந்த கனவு மிஷினுக்கு காரணமாம்....

லியானோர்டோ டிகாப்ரியோ நடித்த படம் இன்செப்ஷன். இந்தப் படத்தில் கூட தூங்கும்போது மனதில் இருப்பதை நவீன உத்தி மூலம் கண்டுபிடித்து அதன் மூலம் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

நிஜம் பாதி... ரீல் மீதியா..?

நிஜம் பாதி... ரீல் மீதியா..?

ஆனா, அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் கூட ஓரளவுக்கு இந்த புதிய கம்ப்யூட்டர் புரோகிராம் மனிதர்களின் மனதில் இருப்பதை ஓரளவு வெளிக்காட்ட உதவுகிறதாம்.

இதுவே ரொம்ப ஓவர் தான்...

இதுவே ரொம்ப ஓவர் தான்...

இந்த அளவுக்கு கண்டுபிடிக்க முடிகிறது என்பதே மிகப் பெரிய ஆச்சரியம் என்று விஞ்ஞானிகள் இதுகுறித்து தெரிவித்துள்னர். ஜப்பான் நாட்டு விஞ்ஞானிகள் குழுதான் இந்த சாதனையைச் செய்துள்ளது.

தாலாட்டு பாடுனீங்களா...?

தாலாட்டு பாடுனீங்களா...?

3 வாலன்டியர்களை வைத்து இந்த சோதனையை நடத்தியது இந்த விஞ்ஞானிகள் குழு. முதலில் இவர்கள் தூங்க வைக்கப்பட்டனர். பின்னர் பிரத்யேகமான முறையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. ஒவ்வொரு 6 அல்லது 7 நிமிடங்களுக்கு ஒருமுறை அவர்கள் தட்டி தழுப்பி அவர்கள் ஏதாவது கனவு கண்டார்களா, நினைத்தார்களா என்று கேட்டறியப்ட்டது.

கனவு காணும் வாழ்க்கையாவும்....

கனவு காணும் வாழ்க்கையாவும்....

குறைந்தது 200 கனவுகள் அல்லது சிந்தனைகள் வரை இந்த ஆய்வு தொடர்ந்தது. அதுவரை திரும்பத்திரும்ப தூங்க வைத்து ஸ்கேன் செய்து பார்த்து வந்தனர்.

நா சிலை.. மலை... பார்த்தேன்

நா சிலை.. மலை... பார்த்தேன்

ஆய்வில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் இப்படிக் கூறினாராம்- நான் வானிலிருந்து கீழே பார்த்தபோது என் கண்ணில் ஒரு பெரிய வெண்கலச் சிலை தென்பட்டது. அது ஒரு மலை மீது இருந்தது. அதற்கு கீழே வீடுகளும், மரங்களும், தெருக்களும் இருந்தன என்றார்.

படம் பார்த்து கதை சொல்...

படம் பார்த்து கதை சொல்...

இப்படி ஒவ்வொருவரும் கூறியதன் அடிப்படையில் அதை ஒத்த பொருட்களின் படங்களை அவர்களிடம் காட்டி இதுபோல இருந்ததா என்று கேட்டறிந்தனர் விஞ்ஞானிகள். மேலும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களின் மூளை செயல்பாட்டையும் அவர்கள் ஸ்கேன் மூலம் கண்காணித்தனர்.

கம்யூட்டர் ஜோசியம்...

கம்யூட்டர் ஜோசியம்...

இதை வைத்து பிரத்யேகமான கம்ப்யூட்டர் புரோகிராம் மூலம் ஆய்வுகள் பரிசீலிக்கப்பட்டன. அதைக் கொண்டு சம்பந்தப்பட்ட நபர் எதை நினைத்தார் என்பதை கிட்டத்தட்ட உறுதியாகக் கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள். மனதில் ஓடியதை, அந்த கம்ப்யூட்டர் கிட்டத்தட்ட படமாகவே வரைந்தும் காட்டியது என்பதுதான் இதில் விசேஷமானது.

நம்ம ஆளுங்க கனவுல என்னவெல்லாம் வரும்...( ஓர் சின்னக் கற்பனை)

நம்ம ஆளுங்க கனவுல என்னவெல்லாம் வரும்...( ஓர் சின்னக் கற்பனை)

- யூத்துங்க கனவுல சமந்தா வரலாம்...
- பழைய பூத்துஙக் கனவுல ஜோதிலட்சுமி வரலாம்
- அரசியல்வாதிக்கு கனவுல முதலமைச்சர் சேர் வரலாம்...
- 'பெக்கருக்கு' கனவுல அம்பானி வரலாம்...
- லேடீஸ்க்கு கனவுல நாதள்ளாவுக்குப் போய் அள்ள... அள்ள நகை வாங்குவது போல தோணலாம்...

ஆய்வு தொடருகிறதாம்.. நிம்மதியா கனவு கூட காண விடமாட்டீங்களாயா... என்ன கொடுமை சார் இது?

English summary
Scientists have programmed a computer to read people’s dreams. They claim their invention, the ‘dream catcher’ is 60 per cent accurate. The level of detail is still far from that in the Leonardo DiCaprio film Inception, in which people manipulate people’s dreams and steal their sleeping thoughts. Scientists have programmed a computer to read people's dreams, and it is 60 per cent accurate
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X