For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அபுதாபி பொழுதுப்போக்கு பூங்காவில் பெண்கள் மட்டும் குளித்து விளையாட தனி நேரம்

Google Oneindia Tamil News

Abu Dhabi water park to start 'ladies night'
அபுதாபி: அபுதாபியில் உள்ள பிரமாண்ட நீர்நிலை பொழுதுப்போக்கு பூங்காவில் பெண்கள் குளித்து விளையாட மட்டும் தனி அனுமதி நேரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வளைகுடா நாடுகளில் ஒன்றான அபுதாபியில் 'யாஸ் வாட்டர் வேர்ல்ட் பார்க்' என்ற பெயரில் பிரமாண்டமான நீர்சார்ந்த பொழுதுப் போக்கு பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பலகோடி டாலர்கள் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பொழுதுப் போக்கு பூங்காவிற்குள் கண்ணைக் கவரும் நீச்சல் குளங்கள், வணிக வளாகம், வீடியோ கேம்ஸ், உணவகம் என நவீன வசதிகள் அனைத்தும் சுற்றுலா வருபவர்களின் சிந்தையை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

பெண்களுடன் ஆண்களும் சேர்ந்து ஒரே நேரத்தில் இங்கு உல்லாசமாக பொழுதை கழித்து வருகின்றனர். இருப்பினும், இஸ்லாமிய மத கோட்பாடுகளின் படி, ஆண்கள் குளிக்கும் இடத்தில் தாங்களும் சேர்ந்து குளிப்பதை அபுதாபியில் வாழும் முஸ்லிம் பெண்கள் விரும்பவில்லை.

பெண்கள் மட்டும் பொழுதை உல்லாசமாக கழிக்கும் வகையில் இந்த பொழுதுப் போக்கு பூங்காவில் தனிநேரம் ஒதுக்கித் தர வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இந்த கோரிக்கைகளை பரிசீலத்த பொழுதுப் போக்கு பூங்காவின் நிர்வாகிகள், ஏப்ரல் 18ம் தேதியிலிருந்து, வியாழன் தோறும் இரவு 8 மணியிலிருந்து நள்ளிரவு வரை பெண்கள் மட்டும் இங்கு வருவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

அவ்வேளைகளில், ஆண்கள் உள்ளே நுழைய தடை விதிக்கப்படும். 8 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மட்டும் வயதுக்கான சான்றிதழை காண்பித்து, உறவினர்களுடன் கேளிக்கையில் பங்கேற்கலாம் என 'யாஸ் வாட்டர் வேர்ல்ட் பூங்கா'வின் பொது மேலாளர் மைக் ஓஸ்வால்ட் தெரிவித்துள்ளார்.

English summary
In a move necessitated by popular demand, the Yas Waterworld park in Abu Dhabi will launch a special "Ladies Night" every week, when men will not be admitted to the park.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X