For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏகாந்த விரும்புகளின் ஆச்சரிய தருணங்கள்.. ஒரு போட்டோ ரவுண்டப்!

Google Oneindia Tamil News

கலிபோர்னியா: சிலருக்கு இயற்கை பிடிக்கும். இயற்கையைத் தேடி, அதன் அழகை நாடி கையில் கேமராவுடன் புறப்பட்டு விடுவார்கள்.

கண்ணில் காணும் இயற்கைக் காட்சிகளை ரசித்தபடியும், அனுபவித்தபடியும் பொழுதைக் கழிப்பார்கள்.

பெரும்பாலும் வனாந்திரம், பாலைவனம், ஆளரவற்ற அருமையான புல்வெளிகள் உள்ளிட்ட பகுதிகளில்தான் இப்படிப்பட்டவர்களை அதிகம் காணலாம்.

அப்படிப்பட்ட அழகிய தருணங்களின் புகைப்படத் தொகுப்பு இது... இந்தப் புகைப்படத் தொகுப்பை அமெரிக்காவைச் சேர்ந்த லின்ட்சே டிஅடடோ என்பவர் வெளியிட்டுள்ளார்.

புகைப்படங்கள் - www.lindsaydaddato.com/

இயற்கைக்குப் புகை பகை இல்லையா...

இயற்கைக்குப் புகை பகை இல்லையா...

அழகான இயற்கைச் சூழலில், சுற்றிலும் மரங்கள் நிமிர்ந்து நிற்க.. தனிமையில் இனிமை ... ஆனால் புகை இயற்கைக்குப் பகை இல்லையோ....

என்னை விட்டு விடு இப்படியே..

என்னை விட்டு விடு இப்படியே..

என்னைச் சுற்றி என்ன வேண்டுமானாலும் நடந்து விட்டுப் போகட்டும்... என்னை இப்படியே விட்டு விடுங்கள்... இயற்கையே நீ மெல்லத் தாலாட்டு..

வணங்குகிறேன் தாயே...

வணங்குகிறேன் தாயே...

இப்படியே இருக்கட்டும் இந்த இயற்கை.. எங்களையெல்லாம் காத்தருளும் உன்னை வணங்குகிறோம்...

கனவுகள் சிதறிப் போனதே...

கனவுகள் சிதறிப் போனதே...

சிதறிய கனவுகளால் சிதறுண்டு போனதைப் போல தெரிகிறது இவர்களின் முகங்கள்.. தனிமை இவர்களைத் தேற்றவில்லை போலும்.

தாலாட்டுதே வானம்

தாலாட்டுதே வானம்

தாலாட்டுதே வானம்.. தள்ளாடுதே மேகம்.. இதற்கு மேல் என்ன சொல்ல..

சாந்தி கொடு.. சக்தி கொடு

சாந்தி கொடு.. சக்தி கொடு

அப்படியே மெல்ல மூழ்கட்டும் என் தேகம்.. உள்ளத்தில் ஊஞ்சலாடும் சங்கடங்கள், சலனங்கள் நீரில் அழுந்திப் போகட்டும்.. நான் மட்டும் சுத்தமாக வெளியே வந்தால் போதும்.

காற்றுக்கென்ன வேலி...

காற்றுக்கென்ன வேலி...

என்னை விட்டுத் தூரச் செல்லும் ஏகாந்தமே என் அருகில் வா.. நான் இளைப்பாற வேண்டும்.

சூரியனுக்கே முட்டுக்கட்டையா...

சூரியனுக்கே முட்டுக்கட்டையா...

சுட்டெரிக்கும் சூரியனை சற்றே மறைக்கத்தான் இந்த முட்டுக்கட்டையோ...கல்லே தள்ளிப் போ, பகலவனைப் பார்க்க வேண்டும்.

English summary
Photographer Lindsay D'Addato, who lives and works between New York and central Wyoming, said she wanted to investigate, through her pictures, the supernaturality of everyday life. The result is a visually stunning series called 'Mystery, Magic, Mother,' which depicts a number of different characters united in the search of a grand illusion - an escape to the wilderness.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X