For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எமர்ஜென்சியின் போது சஞ்சய் காந்தியை கடுமையாக எதிர்த்த ஏ.கே. ஆண்டனி: விக்கிலீக்ஸ்

By Mathi
Google Oneindia Tamil News

A K Antony
டெல்லி: இந்திரா காந்தியால் நாட்டில் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட போது காங்கிரஸ் கட்சியில் கோலோச்சிய சஞ்சய் காந்தியை எதிர்த்த ஒரே காங்கிரஸ் தலைவர் ஏ.கே. ஆண்டனிதான் என்று விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க தூதரக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ஆவணத்தில் இடம்பெற்றுள்ள விவரம்:

இந்தியாவில் எமர்ஜென்சி அமலில் இருந்த போது 1976-ம் ஆண்டில் அசாம் தலைநகர் கவுகாத்தியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அப்போது சஞ்சய் காந்தி காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு பெற்றவராக இருந்தார். ஆனால் ஏ.கே. ஆண்டனி தலைமையிலான கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி சஞ்சய் காந்தியை ஆதரிக்க மறுத்தது. கட்சியின் அதிகாரத்தைக் கைப்பற்ற அவர் அவசர கதியில் முயலுவதாகவும் குற்றம்சாட்டியது. காங்கிரஸ் கட்சிக்காக அல்லது நாட்டுக்காக சஞ்சய் காந்தி அப்படி என்ன தியாகம் செய்தார் என்றும் ஆண்டனி கேள்வி எழுப்பியிருக்கிறார்..

காங்கிரஸ் கட்சியில் இந்திரா காந்திக்கு அடுத்த தலைவராக சஞ்சய் காந்தி தம்மை முன்னிலைப்படுத்தி வந்தார். ஆனால் அவருக்கு எதிராக அப்போது துணிச்சலாக எதிர்ப்புத் தெரிவித்தவர் ஏ.கே. ஆண்டனிதான்.ஏ.கே. ஆண்டனி தவிர மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரியரஞ்சன் தாஸ் முன்ஷியும் சஞ்சய் காந்திக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். இதனால் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பெரும் குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது.

சஞ்சய் காந்தி ஒரு அரசியல்வாதி அல்ல. அரசியல்ரீதியாக தலைமை வகிப்பதற்கு அவருக்கு எந்த தகுதியும் இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினரிடையே கருத்து நிலவுகிறது என்று அதில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

சஞ்சய் காந்தியை மிகக் கடுமையாக எதிர்த்தவர் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் ஏ.கே. ஆண்டணிக்கு சோனியா காந்தி இவ்வளவு முக்கியத்துவம் தருகிறார் என்ற உண்மை இளந்தலைமுறைக்கு புரிந்திருக்கும்!

English summary
K Antony was "one of the only" leaders apart from Priyaranjan Dasmunsi who "flatly criticised" Sanjay Gandhi during 1976 AICC session in Guwahati during Emergency when the latter's political graph was on the rise, an US diplomatic cable has claimed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X