For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிசம்பருக்குள் பிரதமர் வேட்பாளரை அறிவிக்க பாஜகவுக்கு ஐக்கிய ஜனதா தளம் 'கெடு'

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம் கெடு விதித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி முன்னிறுத்தப்படுவார் என்று கருத்து பொதுவாக இருந்து வருகிறது. இதற்கு தொடக்கம் முதலே ஐக்கிய ஜனதா தளம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுடனும் அண்மைக் காலமாக ஐக்கிய ஜனதா தளம் ஆளும் பீகார் மாநில அரசு நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வருகிறது.

தீர்மானம் போட்ட நிதிஷ் குமார்...

தீர்மானம் போட்ட நிதிஷ் குமார்...

இந்நிலையில் டெல்லியில் ஐக்கிய ஜனதா தளத்தின் 2 நாள் தேசிய செயற்குழுக் கூட்டம் நேற்று நிறைவடைந்தது. இக்கூட்டத்தில் கட்சித் தலைவராக 3-வது முறையாக சரத் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் பிரதமர் பதவி வேட்பாளர் குறித்த ஒரு தீர்மானமும் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வாஜ்பாய்-அத்வானி?

வாஜ்பாய்-அத்வானி?

அந்தத் தீர்மானமானது குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் அவரை நிராகரிப்பது என முடிவு செய்து நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்தீர்மானத்தில், கடந்த 1999 மற்றும் 2004ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்களை வாஜ்பாய் தலைமையில் சந்தித்தோம். 2009ம் ஆண்டு தேர்தலை அத்வானி தலைமையில் சந்தித்தோம். எனவே, தேர்தலுக்கு முன்பே பிரதமர் பதவி வேட்பாளர் பெயரை அறிவிப்பது வழக்கமானதுதான். அந்த அடிப்படையில், 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளரை தேர்தலுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இந்த கூட்டணியின் பெரிய கட்சி பாரதிய ஜனதாதான்.

மதச்சார்பின்மை கொள்கையை பின்பற்றுபவராக இருக்க வேண்டும்...

மதச்சார்பின்மை கொள்கையை பின்பற்றுபவராக இருக்க வேண்டும்...

எனவே அக்கட்சி இதற்கான முன்முயற்சிகளை எடுக்க வேண்டும். இந்த ஆண்டு இறுதிக்குள் வேட்பாளரை அறிவிக்க வேண்டும். பல மொழிகளும், பல மதங்களும் கொண்ட நாட்டின் பிரதமர் வேட்பாளர், சந்தேகத்துக்கு இடமின்றி, மதச்சார்பின்மை கொள்கையை பின்பற்றுபவராக இருக்க வேண்டும். கூட்டணியின் செயல்திட்டப்படி நடப்பவராக இருக்க வேண்டும். வளர்ச்சிக்கு பாடுபடுபவராகவும், நாட்டின் பின்தங்கிய பிராந்தியங்களையும், மாநிலங்களையும் கைதூக்கி விட உறுதி பூண்டவராகவும் இருக்க வேண்டும். இவற்றை மனதில் கொண்டு வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

எங்கள் கருத்துகள் புறக்கணிக்கப்பட்டால்...

எங்கள் கருத்துகள் புறக்கணிக்கப்பட்டால்...

இந்த தேசிய செயற்குழுக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார், பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிவிக்க கெடு விதித்திருக்கிறோம்.

பிரதமர் வேட்பாளர் எனப்வர் அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து வளர்ச்சியில் நம்பிக்கை உடையவராக இருக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு மதச்சார்பின்மை என்பது முக்கியம். எங்களுடைய கட்சி சிறிய கட்சி என்பதால் பிரதமர் பதவி மீது ஆசை வைத்துக் கொள்ள விரும்பவில்லை. எங்கள் கருத்துகள் புறக்கணிக்கப்பட்டால், நாங்கள் உரிய முடிவு எடுப்போம்.

வாஜ்பாய் போன்ற சிந்தனை உடையவரே தேவை...

வாஜ்பாய் போன்ற சிந்தனை உடையவரே தேவை...

நாட்டை ஆள்வதற்கு வாஜ்பாய் போன்ற சிந்தனை உடையவரே தேவை. குஜராத் கலவரத்தின் போது ராஜதர்மத்தை கடைபிடிக்குமாறு வாஜ்பாய் வலியுறுத்தினார். அதை பின்பற்றவே நாங்கள் முயன்று வருகிறோம். பதவியில் நீடிப்பதற்காக, அடிப்படை கொள்கையான மதச்சார்பின்மை கொள்கையில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்றார்.

மோடி மீது மறைமுக தாக்கு

மோடி மீது மறைமுக தாக்கு

மேலும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பெயரைக் குறிப்பிடாமல், ஒரு சிலர் ஒரு மாநிலத்தை இப்படியும், அப்படியுமாக ஆட்சி செய்து விடுகின்றனர். ஆனால், ஒட்டுமொத்த நாட்டையும் அப்படி ஆண்டுவிட முடியாது. அவர்கள் தாங்கள் ஒரு அலையை உருவாக்க முடியும் என்றும், அதை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றும் கருதுகின்றனர். இதுபோன்ற அலைகள் நாட்டில் எப்போதும் இருக்கும். எத்தனையோ அலைகளை மக்கள் பார்த்துள்ளனர். அலையை வைத்து நாட்டை ஆள முடியாது. வெறுமனே யாரையும் முன்நிறுத்துவது சரியாக இருக்காது. அவர்கள் தங்கள் மாநிலத்தை பின்பற்றுமாறு கூறுகின்றனர். மற்ற மாநிலங்களை விட பீகார் நன்றாக வளர்ச்சி அடைந்து உள்ளது. எனவே, நாங்கள் மற்ற மாநிலங்களை பின்பற்ற வேண்டியது இல்லை. இயற்கையாக விளையும் பயிர்தான் உடல் நலனுக்கு ஏற்றது. அதை விடுத்து, மரபணு மாற்றப்பட்ட பயிரை உபயோகித்தால், எதிர்விளைவுகள்தான் ஏற்படும் என்றார் அவர்.

அலையை வைத்து நாட்டை ஆள முடியாது....

அலையை வைத்து நாட்டை ஆள முடியாது....

அலையை வைத்து நாட்டை ஆள முடியாது. வெறுமனே யாரையும் முன்நிறுத்துவது சரியாக இருக்காது. அவர்கள் தங்கள் மாநிலத்தை பின்பற்றுமாறு கூறுகின்றனர். மற்ற மாநிலங்களை விட பீகார் நன்றாக வளர்ச்சி அடைந்து உள்ளது. எனவே, நாங்கள் மற்ற மாநிலங்களை பின்பற்ற வேண்டியது இல்லை. இயற்கையாக விளையும் பயிர்தான் உடல் நலனுக்கு ஏற்றது. அதை விடுத்து, மரபணு மாற்றப்பட்ட பயிரை உபயோகித்தால், எதிர்விளைவுகள்தான் ஏற்படும் என்றார் அவர்.

ராஜ்நாத் நிராகரிப்பு

ராஜ்நாத் நிராகரிப்பு

இந்நிலையில் டெல்லியில் பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை ஆட்சி மன்றக்குழுதான் முடிவு செய்யும். பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான அம்சங்களையும் ஆட்சி மன்றக்குழுதான் வகுக்கும். நாட்டிலேயே மிகவும் பிரபலமான தலைவர் ஒருவர் உண்டென்றால், அது நரேந்திரமோடிதான்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கிற கட்சிகள் ஒருபோதும் பிரிந்து போக மாட்டார்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். பா.ஜனதா ஒரு மதச்சார்பற்ற கட்சி. இந்த மதச்சார்பற்ற கட்சியின் ஒரு முதல்வர் மோடி. மோடி மதச்சார்பற்ற தலைவர் இல்லை என்று ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவோ, நிதிஷ் குமாரோ என்னிடம் கூறவில்லை என்றார்

மேலும் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன், மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஒழுங்காக செயல்படாமல் அனைத்து துறைகளிலும் நாட்டை சரிவுப் பாதையில் இட்டுச் சென்று கொண்டிருக்கிறது.

இந்த ஊழல் ஆட்சியை நீக்க வேண்டும் என்கிற விஷயத்தில் எதிர்க்கட்சிகளும் பாஜகவின் கூட்டணிக் கட்சிகளும் கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.துரதிருஷ்டவசமாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணியை நீக்குவதில் கவனம் செலுத்தாமல், பாஜக முதல்வர்கள் மீது கவனம் செலுத்த தங்களது சக்தியை பயன்படுத்துகின்றனர். ஆனால் பாஜக தனது நோக்கத்தில் உறுதியாக இருக்கும். நரேந்திர மோடி குறித்து ஆதாரமற்ற ஊகங்களை பேசக் கூடாது. நரேந்திர மோடிக்கு எதிரான ஆதாரமற்ற ஊகங்கள் அனைத்தையும் நாங்கள் மறுக்கிறோம் என்றார்.

நிர்மலா சீதாராமன்...

நிர்மலா சீதாராமன்...

மேலும் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன், மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஒழுங்காக செயல்படாமல் அனைத்து துறைகளிலும் நாட்டை சரிவுப் பாதையில் இட்டுச் சென்று கொண்டிருக்கிறது.

இந்த ஊழல் ஆட்சியை நீக்க வேண்டும் என்கிற விஷயத்தில் எதிர்க்கட்சிகளும் பாஜகவின் கூட்டணிக் கட்சிகளும் கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.துரதிருஷ்டவசமாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணியை நீக்குவதில் கவனம் செலுத்தாமல், பாஜக முதல்வர்கள் மீது கவனம் செலுத்த தங்களது சக்தியை பயன்படுத்துகின்றனர். ஆனால் பாஜக தனது நோக்கத்தில் உறுதியாக இருக்கும். நரேந்திர மோடி குறித்து ஆதாரமற்ற ஊகங்களை பேசக் கூடாது. நரேந்திர மோடிக்கு எதிரான ஆதாரமற்ற ஊகங்கள் அனைத்தையும் நாங்கள் மறுக்கிறோம் என்றார்.

English summary
Leaving no scope for the BJP to duck the issue, the Janata Dal (United), one of its key allies, demanded on Sunday that the party announce its prime ministerial candidate for the 2014 general election by year-end, adding a caveat that the nominee’s “secular credibility” should be “beyond doubt.”
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X