For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாஜகவின் பிரதமர் வேட்பாளர் முன்கூட்டியே அறிவிப்பு இல்லை?

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: லோக்சபா தேர்தலுக்கு முன்பே பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரை அக்கட்சி அறிவிக்காது என்று டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி முன்னிறுத்தப்படுவார் என்று தகவல்கள் வெளியான நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளமும் சிவசேனாவும் போர்க்கொடி தூக்கியிருக்கின்றன. இதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணி கலகலத்துப் போகக் கூடிய நிலைமை உருவாகியுள்ளது.

2014ஆம் ஆண்டு இறுதிக்குள்ளேயே யார் பிரதமர் வேட்பாளர் என்பதை அறிக்க வேண்டும் என்பது ஐக்கிய ஜனதா தளத்தின் கெடு. பாரதிய ஜனதா கட்சி யாரை வேண்டுமானாலும் தீர்மானிக்கலாம்.. ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் இறுதி முடிவெடுக்கும் என்பது சிவசேனாவின் நிலை.

இந்த இடியாப்பச் சிக்கலில் இருந்து தப்பிக்கவே லோக்சபா தேர்தலுக்கு முன்பாக யார் பிரதமர் வேட்பாளர் என்பதை அறிவிக்காமலேயே இருந்துவிடுவது என்று பாஜக முடிவு எடுத்துள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
Amid demands from key allies like the JD(U) and the Shiv Sena to name its prime ministerial candidate for 2014 polls well in advance, the Bharatiya Janata Party (BJP) is reported to have decided against any such move. Amid demands from key allies like the JD(U) and the Shiv Sena to name its prime ministerial
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X