For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சேதாரத்தைத் தடுக்க விரைவில் பிளாஸ்டிக் வாக்காளர் அட்டை!

Google Oneindia Tamil News

டெல்லி: விரைவில், பிளாஸ்டிக் வாக்காளர் அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.

நாடெங்கும் தற்போது வழங்கப்பட்டு வரும் வாக்காளர் அடையாள அட்டைகள், காகிதத்தின் மீது 'லேமினேஷன்' செய்யப்பட்டவையாக உள்ளன.

இவை நாளடைவில் சேதமாகி விடுகின்றன. இந்நிலையை போக்கும் வகையில் டிரைவிங் லைசென்ஸ், வருமான வரி கணக்கு அட்டைகளைப் (பேன் கார்ட்) போன்ற வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்க இந்திய தேர்தல் கமிஷன் முடிவெடுத்துள்ளது.

செலவு...

தற்போதைய அடையாள அட்டைகளை தயாரிக்க அட்டை ஒன்றுக்கு ரூ.10 முதல் 12 வரை அரசுக்கு செலவாகிறதாம் அரசுக்கு...

பிளாஸ்டிக் அட்டைக்கு 50 ரூபாயா?

வண்ண புகைப்படத்துடன் கூடிய தரமான பிளாஸ்டிக் அடையாள அட்டைகளை தயாரித்து வாக்காளர்களிடம் ரூ.50க்கும் குறைவான தொகையை கட்டணமாக பெற தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.

முதல்ல வடக்க...

இத்தகைய நவீன அட்டைகள், அசாம் மற்றும் நாகலாந்து மாநிலங்களில் முதன் முறையாக சோதனை முயற்சியாக வழங்கப்படுமாம்.

அப்புறம் எல்லாருக்கும்...

விரைவில் அனைத்து மாநிலங்களுக்கும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணைய துணை கமிஷனர் அலோக் சுக்லா கூறியுள்ளார்.

English summary
The Election Commission is considering changing the laminated voter identity card into a driving license-like hard plastic card which is more durable.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X