For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாயன் காலத்து பிரமிடை இடித்து சாலைக்கு மண் எடுத்த கட்டுமான நிறுவனம்: பிரேசிலில் பரபரப்பு

Google Oneindia Tamil News

பிரேசிலியா: மாயன் காலத்து பிரமிட்டை கட்டுமான நிறுவனம் ஒன்று மண் எடுப்பதற்காக இடித்ததால் பிரேசிலில் பரபரப்பு நிலவுகிறது.

2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வடஅமெரிக்காவில் மாயன் இனத்து மக்கள் நாகரீகத்துடன் வாழ்ந்து வந்ததாக வரலாற்றுப் பக்கங்கள் தெரிவிக்கின்றன. மாயன் இன மக்கள் அந்த காலத்திலேயே பிரமிடுகள், பிரமாண்ட கட்டிடங்கள் போன்றவற்றை கட்டிவைத்தனர்.

ஐரோப்பியர்கள் அங்கு குடிபெயர்ந்த பின்னர் அவர்களில் பெரும் பகுதி மக்களை கொன்றுவிட்டனர். தற்போதும் மாயன் காலத்து எச்சங்கள் இருக்கின்றன. இப்படி பிரேசில் நாட்டில் உள்ள பெரிஸ் என்ற இடத்தில் 100 அடி உயரத்துக்கும் அதிகமான பிரேமீடு ஒன்றும் இருந்தது.

2300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இதில், பராமரிப்பு இல்லாததால், புதர்கள் வளர்ந்த நிலையில் புதையுண்ட நிலையில் இருந்தது. இந்த நிலையில் தற்போது அந்த பகுதியில் சாலை ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. கட்டுமான நிறுவனம் ஒன்று இந்த சாலையை அமைத்து வருகிறது. அவர்கள் ரோடு போடுவதற்காக பிரமிடின் ஒரு பகுதியை இடித்து அதில் இருந்து மண் எடுத்து சென்றனர்.

இதுபற்றிய தகவல் பழங்கால பொருட்கள் பாதுகாப்பு அமைப்புக்கு தெரியவந்ததையடுத்து, அவர்கள் அரசிடம் புகார் கொடுத்துள்ளனர். பின் உடனடியாக அங்கு மண் எடுப்பது நிறுத்தப்பட்டது. பிரமிட்டை இடித்த கட்டுமான நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்ய பழங்கால பொருட்கள் பாதுகாப்பு அமைப்பு முடிவு செய்துள்ளனர்.

English summary
Despite its small size, the Caribbean country of Belize is known for a few outstanding characteristics: a spectacular barrier reef, a teeming rain forest, and extensive Maya ruins.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X