For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் மு.க. அழகிரி ஆஜர்!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: லோக்சபா தேர்தலில் மது‌ரை தொகுதியில் மு.க. அழகிரி வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் ஆஜராகி விளககம் அளித்தார்.

2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மதுரை தொகுதியில் மு.க. அழகிரி வெற்றி பெற்றார். ஆனால் அவரது வெற்றி செல்லாது என அறிவிக்ககோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மோகன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தும், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டும் அவர் தேர்தலில் வெற்றி பெற்றார் என்பது மோகனின் புகார்.

இந்நிலையில் உடல் நிலை பாதிக்கபட்டு மோகன் உயிரிழக்க தேர்தல் ஏஜெண்டும் தற்போதைய எம்.எல்.ஏ.வுமான லாசர் இந்த வழக்கை தொடர்ந்தும் நடத்த அனுமதி பெற்றார்.. இவவழக்கில் இன்று அழகிரி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்த வழக்கின் விசார‌ணையை வரும் 13ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

English summary
Former Union minister and DMK strongman from Madurai, M K Alagiri appeared before the Madras high court on Friday in connection with the election case questioning his election from Madurai constituency in 2009
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X