For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஃபேஸ்புக் சாட்டிங்கில் காதலியை 'களவாடியதால்' கொன்றோம்… ஓசூர் மாணவரை கொன்றவர்கள் வாக்குமூலம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Facebook
சென்னை: ஃபேஸ்புக் மூலம் சாட்டிங் செய்து காதலியை அபகரித்ததால் ஆத்திரத்தில் கொலை செய்தோம் என்று ஓசூர் எஞ்சினியரிங் மாணவர் கொலைவழக்கில் கைதான மாணவர்கள் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

சென்னை அம்பத்தூர் ராம்நகர் திருமூர்த்தி தெருவை சேர்ந்தவர் ராமநாதன். இவரது மகன் ராகவ் (22). இவர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில், பி.இ. ஆர்க்கிடெக் படித்து வந்தார். இவர் ஓசூர் காமராஜர் காலனி 3வது குறுக்கு தெருவில் ஒரு வீட்டின் மாடியில் அறை எடுத்து தங்கி இருந்தார். 3 ஆண்டு படிப்பு முடிந்த நிலையில், அறையை காலி செய்து விட்டு சென்னை செல்வதற்காக கிளம்பிய நிலையில் புதன்கிழமையன்று அதிகாலை நேரத்தில் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடிய போலீசார், அதே கல்லூரியில் 3ம் ஆண்டு படிக்கும் மாணவர் பிரவீன்குமார், முதலாம் ஆண்டு மாணவர் பிரதாப் சச்சின் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இதையடுத்து கைதான மாணவர் பிரவீன் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில், கூறியதாவது: நானும் எங்கள் கல்லூரியில் படித்து வரும் ஒரு மாணவியும் காதலித்து வந்தோம். அப்போது பேஸ்புக் மூலம் சாட்டிங் செய்து ராகவ் உடன் என் காதலிக்கு தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து என் காதலி என்னை கழற்றி விட்டு ராகவ் உடன் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டார்.

ராகவ் என் காதலியை அபகரித்து கொண்டதால் எனக்கு அவர் மீது கோபம் ஏற்பட்டது. இதையடுத்து நானும் எனது நண்பர் பிரதாப் சச்சினும் சேர்ந்து ராகவை நேரில் சந்தித்து கடந்த வாரம் எச்சரித்தோம். அப்போது ராகவ் காதலை கைவிட முடியாது என்றார். எனவே அவரை கொலை செய்ய நாங்கள் திட்டம் போட்டோம்.

அதன்படி ராகவ் தங்கியிருந்த வீட்டிற்கு கடந்த 4-ந் தேதி இரவு சென்றோம். பின்னர் இரவு முழுவதும் நாங்கள் 3 பேரும் பேசி கொண்டே இருந்தோம். அப்போது ஒரு கட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நானும், பிரதாப் சச்சினும், ராகவின் கழுத்தை வயரால் இறுக்கியும், தலையணையால் அமுக்கியும் கொலை செய்ய முயன்றோம். ஆனால் ராகவ் திமிறியதால் வீட்டில் இருந்த கத்தியால் ராகவ் கழுத்தை இருவரும் அறுத்தோம். இதில் ராகவ் ரத்தவெள்ளத்தில் இறந்து விட்டார். இதையடுத்து நாங்கள் அங்கிருந்து தப்பி வந்து விட்டோம்.

கில்லி படம் போல

‘கில்லி' திரைப்படத்தில் கதாநாயகியை மோப்ப நாய் பிடிக்காமல் இருக்க, கதாநாயகன் மிளகாய் பொடியை தூவுவது போல் ஒரு காட்சி வரும். அதனைப் போல போலீசிடம் இருந்து தப்பிக்க மிளகாய் பொடி டெக்னிக்கை பயன்படுத்தினோம்.

ராகவ்வை கொலை செய்த போது எனது கையிலும் லேசான காயம் ஏற்பட்டது. அதற்காக ஒரு கிளினிக்கில் சிகிச்சை பெற்று ஈரோட்டில் உள்ள எனது வீட்டிற்கு சென்று விட்டேன். வீட்டில் காயம் குறித்து கேட்ட போது என்னை சிலர் மிரட்டி கத்தியால் குத்திவிட்டனர் என்று தெரிவித்தேன். பின்னர் போலீசார் ஈரோடு வந்து என்னை பிடித்து விசாரித்த போது நடந்த விபரங்களை கூறினேன். தொடர்ந்து போலீசார் கைது செய்தனர்" என்று தெரிவித்தான். இதே போல் மாணவர் பிரதாப் சச்சினும் வாக்குமூலம் அளித்து உள்ளான்.

ஃபேஸ் புக் மூலமாக இதுவரை வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்ககளில் மட்டும்தான் அதிக அளவில் குற்றங்கள் நடந்தது. இப்போது தமிழ்நாட்டிலும் அதிக அளவில் கொலைகள் நடக்க ஆரம்பித்துவிட்டது. ஒரு காதலால் எஞ்ஜினியரிங் படித்த மாணவனின் உயிர் போனதோடு இரண்டு மாணவர்கள் சிறைக்குப் போகும் நிலை ஏற்பட்டுவிட்டது.

English summary
The arrested accused in Hosur engineer murder case has stated that why they killed the engineering student.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X