For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வங்கதேச கட்டிட விபத்து: உயிர் பிழைத்த அதிசயப் பெண்ணுக்கு நட்சத்திர ஹோட்டலில் வேலை

Google Oneindia Tamil News

Reshma Begum
டாக்கா: உலகையே உலுக்கிய வங்காளதேச கட்டிட விபத்தில் 17 நாட்களுக்குப் பிறகு உயிர் பிழைத்த அதிசயப் பெண்ணுக்கு நட்சத்திர ஹோட்டலில் வேலை கிடைத்துள்ளதாம்.

கடந்த மாதம் வங்காளதேசத்தில் 8 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் சுமார் 1129 பேர் பலியானார்கள். இதில் அதிர்ஷ்டவசமாக நூற்றுக்கணக்கானோர் உயிருடன் மீட்கப்பட்ட அதிசயமும் நிகழ்ந்தது.

அதிலும் குறிப்பாக, 19 வயது ரேஷ்மா பேகம் என்ற தையல் தொழிலாளி ஒருவர் விபத்து நடந்து கிட்டத்தட்ட 17 நாட்களுக்குப் பிறகு மீட்புக் குழுவினரின் தீவிர தேடுதல் வேட்டையின் பலனாக உயிரோடு மீட்கப்பட்டார்.

பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அவர் ராணுவ ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெஏஏஉ வந்தார். தற்போது பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ள ரேஷ்மா, விபத்து குறித்து கூறும்போது, "உயிர் பிழைப்பேன் என்று நினைக்கவில்லை. அந்த நிலையில் என்னை காப்பாற்றியதற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி. முன்பு நான் எங்கிருந்தேன், இப்பொழுது நான் எங்கு இருக்கிறேன், என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை" என தான் உயிர் பிழைத்த அனுபவங்களை மெய் சிலிர்க்கக் கூறினார்.

கிட்டத்தட்ட மரணத்தை ருசித்து விட்டு திரும்பியுள்ள ரேஷ்மா தான் தற்போது வங்காளதேசத்தின் ஹீரோயின். இந்த ஹீரோயினுக்கு ஒரு ஸ்டார் ஓட்டல் நிர்வாகம், ரூ.25,000 மாதச் சம்பளத்தில் வரவேற்பாளர் வேலை கொடுக்க முன் வந்துள்ளது தான் லேட்டஸ்ட் ஹாட் நியூஸாம்.

பாருங்க பாஸ், கொடுக்கிற தெய்வம் கட்டடத்த இடிச்சுக்கிட்டு கொடுத்திருக்கு....

English summary
A teenage seamstress who survived 17 days trapped under the rubble of a collapsed Bangladesh garment factory walked smiling out of a military hospital on Thursday and into a new job in a five-star hotel.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X