For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கையில காசு... வாயில பிளாஸ்டிக் நாக்கு...: உடல் எடையைக் குறைக்கும் புதிய முறை

Google Oneindia Tamil News

லாஸ் ஏஞ்சல்ஸ்: வாயைக் கட்டினா உடம்பு தானா குறையும்னு நம்ம பெரியவங்க சொல்லுவாங்கல, அது இப்ப உண்மையாகப் போகுதுங்க.

உடம்ப குறைக்க உடற்பயிற்சி, டயட்னு பலவிதங்கள்ல பலர் கஷ்டப்பட்டுகிட்டு இருக்க, நாக்குல ஒரு பிளாஸ்டிக் துண்ட ஒட்ட வச்சாப் போதும் சிம்பிள்னு ஐடியா தர்றார் ஒரு பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை நிபுணர்.

சிறு தையல் மூலம் நாக்கில் இந்த பிளாஸ்டிக் துண்டை வைத்து தைத்து விட்டால், உட்செல்லும் உணவின் அளவு குறைந்து, உடல் எடை எளிதாக குறைந்து விடுகிறதாம்.

பிளாஸ்டிக் சிப்....

பிளாஸ்டிக் சிப்....

அமெரிக்காவைச் சேர்ந்த பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை நிபுணரான நிக்கோலஸ் சுகே ஒரு பிளாஸ்டிக் சிப் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். அதை நாக்கில் ஒட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

கரும்பு சாப்டுறது கஷ்டமாம்...

கரும்பு சாப்டுறது கஷ்டமாம்...

கடினமாக அதிக கலோரி உணவுப்பொருட்களை சுவைக்கும் போது பிளாஸ்டிக் துண்டு வலியை ஏற்படுத்துமாம். அதனால் அத்தகைய உணவை சாப்பிட வெறுப்பு உண்டாகி நாம் அதை தவிர்த்து விடுவோம். அதனால் உடல் எடை கூடாதாம்.

ஈஸியா ஜூஸ் குடிக்கலாம்...

ஈஸியா ஜூஸ் குடிக்கலாம்...

ஆனால், திரவ பொருட்களை பருகினால் அந்த பிளாஸ்டிக் துண்டு ஒன்றும் செய்யாது. எனவே, திரவ உணவுகளை அதிகளவில் எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் எடையை சீராக்க முடியுமாம்.

14 கிலோ குறையுதாம்...

14 கிலோ குறையுதாம்...

இந்த பிளாஸ்டிக் துண்டு மருத்துவத்தின் மூலம், ஒரே மாதத்தில் 14 கிலோ எடையை குறைக்க முடியும் என்று நிக்கோலஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விலையைப் பார்த்தாலே சாப்பிடத் தோணாது....

விலையைப் பார்த்தாலே சாப்பிடத் தோணாது....

ஆனால் என்ன இதற்கு ஆகும் செலவு தான் கொஞ்சம் அதிகமாம். அதாவது, கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் ரூபாய் விலையாம் இந்த பிளாஸ்டிக் துண்டு.

English summary
The latest invention to prey on the insecurities (and insanity) people have about their weight is a 'miracle patch' which is sewn into the tongue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X