For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பரிசளிக்க இருந்த வைர மோதிரத்தை திருடினார் புதின்: அமெரிக்கரின் புகாரால் பரபரப்பு

Google Oneindia Tamil News

நியூயார்க்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு பரசளிக்க கொண்டு சென்ற வர மோதிரத்தை, பரிசளிப்பதற்கு முன்பாகவே புதின் திருடிச் சென்று விட்டார் என அமெரிக்காவில் வாழும் பிரபல கால்பந்து அணியின் உரிமையாளர் புகார் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் உள்ள பாட்ரியாட்ஸ் அமெரிக்கன் கால் பந்து அணியின் உரிமையாளரான ராபர்ட் கிராப்ட்க்கு விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் மிகப்பெரிய தொழில் நிறுவனம் உள்ளது. இவர் 2005-ம் ஆண்டில் செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கில் நடந்த விழாவில் கலந்து கொண்ட போது ரஷ்ய அதிபர் புதினைச் சந்தித்தாராம்.

அப்போது தான் அணிந்திருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரத்தை புதினிடம் காட்டினாராம் ராபர்ட். அதனை ரசித்த புதின் ராபர்ட் எதிர்பார்க்காத போது, அந்த மோதிரத்தை தனது பாக்கெட்டில் போட்டு விட்டாராம். அப்போது அதனைப் பெரிது படுத்தினால், அமெரிக்க-ரஷ்ய உறவு பாதிக்கப்படுமென சும்மா இருந்து விட்டாராம் ராபர்ட்.

மேலும், இது குறித்து ராபர்ட் கூறியதாவது, ‘அதை எனது நினைவு பரிசாக புடினுக்கு வழங்க நான் நினைத்திருந்தேன். ஆனால், அவர் இதுபோன்று செய்வார் என நான் நினைக்கவில்லை. இச்சம்பவம் புஷ் அதிபராக இருந்தபோது நடந்தது. இதுகுறித்து நான் வெள்ளை மாளிகையில் புகார் செய்தேன். ஆனால், இதை பெரிதுபடுத்த வேண்டாம். இதன் மூலம் அமெரிக்கா- ரஷியா உறவில் சிக்கல் ஏற்படும் என அதிகாரி தெரிவித்து விட்டார். எனவே அதை நான் கண்டு கொள்ளவில்லை' எனத் தெரிவித்துள்ளார்.

இந்த அதிர்ச்சிகரமான புகாரை சமீபத்தில் நியூயார்க்கில் நடந்த விழாவில் தெரிவித்தார் ராபர்ட். இது குறித்து தகவல் அறிந்த புதினின் செய்தி தொடர்பாளர், இந்த புகாரை மறுத்துள்ளார். மேலும், அம்மோதிரம் புதினுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது தான் என அவர் தெளிவு படுத்தியுள்ளார்.

English summary
A spokesman for Russian President Vladimir Putin refuted New England Patriots owner Robert Kraft's claims that the politician stole his Super Bowl ring in 2005, according to CNN.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X