For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உத்தரகண்டில் நிலச்சரிவில் சிக்கி பசியால் உயிரிழந்த விழுப்புரம் விஜயா

By Siva
Google Oneindia Tamil News

Uttarakhand Flood
சென்னை: உத்தரகண்டிற்கு புனித யாத்திரை சென்ற விழுப்புரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நிலச்சரிவில் சிக்கி பசியால் உயிர் இழந்தார்.

தமிழகத்தில் இருந்து 399 பேர் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத்துக்கு புனித யாத்திரை சென்றனர். இந்நிலையில் உத்தரகண்டில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு எடுத்தது, மேலும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஏராளமான யாத்ரீகர்கள் உயிர் இழந்தனர். இந்நிலையில் கடந்த 11ம் தேதி விழுப்புரத்தில் இருந்து கேதர்நாத் சென்ற 56 பேர் நிலச்சரிவில் சிக்கித் தவித்தனர். அவர்கள் உணவு, நீரின்றி தவித்து வந்தனர். இதில் விஜயா என்பவர் உண்ண உணவின்றி பசியால் பரிதாபமாக உயிர் இழந்தார். மேலும் ஒருவர் வெள்ளித்தில் அடித்துச் செல்லப்பட்டார். அவரது கதி என்னவென்று தெரியவில்லை.

விஜயாவின் உடலை விழுப்புரம் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

English summary
Villupuram based Vijaya who got stranded in Uttarakhand died of hunger.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X