For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீட்புப் பணிகள் இரண்டொரு நாளில் முடிவடைந்து விடும்: உத்தரகாண்ட் முதலமைச்சர் உறுதி

Google Oneindia Tamil News

டேராடூன்: உத்தரகாண்ட் மீட்புப் பணிகள் இன்னும் இரண்டு நாட்களில் முழுவதுமாக முடிந்து விடும் என அம்மாநில முதலமைச்சர் விஜய் பகுபணா தெரிவித்துள்ளார்.

சென்ற வாரம் உத்தரகாண்டில் பெய்த கன்மழையால் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இறந்தவ்ர்களின் எண்ணிக்கை இதுவரை துல்லியமாக கணக்கிடப்படவில்லை. மீட்பு பணிகள் துரிதகதியில் நடை பெற்று வருகிறது.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உடல்கள் வேறு சில மாநிலங்களில் மீட்கப் பட்டு வருகின்றன. இந்த மீட்புப் பணிகள் இன்னும் இரண்டு நாட்களில் முடிவடைந்து விடும் என அம்மாநில முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Stranded people safe, rescue work to finish in 2-3 days: Uttarakhand CM

மேலும், இது குறித்து அவர் கூறியதாவது, ‘வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சிக்கியுள்ள அனைவரும் 2 நாளில் மீட்கப்படுவார்கள். ஹர்சிஸ் பகுதியில் மக்கள் இன்னும் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க விமானப்படை வீரர்கள் விரைந்துள்ளனர்' என்றார்.

வெள்ளத்தால் சேதமடைந்த கேதார்நாத் ஆலயத்தை கட்டித் தர தயாராக இருப்பதாக குஜராத் முதலமைச்சர் மோடி அறிவித்துள்ள நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பகுகுணா தெரிவித்ததாவது, 'கேதார்நாத் கோவிலை உத்தரகாண்ட் அரசு கட்டும் என்றும், இதற்கு யாராவது உதவி செய்தால் வரவேற்போம்' என கூறியுள்ளார்.

English summary
Uttarakhand chief minister Vijay Bahuguna on Monday said the remaining stranded people - numbering about 10,000 - in the flood-ravaged state are safe and that the mammoth multi-agency evacuation process will be completed in two to three days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X