For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகிந்த ராஜபக்சேவுடன் இலங்கைக்கான புதிய இந்தியத் தூதர் சந்திப்பு!

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கைக்கான புதிய இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ள ஒய்.கே. சின்ஹா இன்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.

அதிபர் மகிந்த ராஜபக்சேவின் அலரி மாளிகையில் இன்று காலை நடைபெற்ற இந்த சந்திப்பில் இந்திய தூதர் சின்ஹாவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற சந்திப்பின் போது தமது நியமனக் கடிதத்தை ராஜபக்சேவிடம் ஒப்படைத்தார்.

New Indian HC presents credentials to President

இந்திய வெளியுறவுத் துறையில் 32 ஆண்டுகாலம் பணியாற்றியவர் சின்ஹா. இலங்கைக்கான தூதராக நியமிக்கப்படுவதற்குக்கு முன்பாக வெளியுறவுத் துறையின் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் நாடுகளின் விவகாரங்களுக்கான கூடுதல் செயலராகப் பணியாற்றினார் அவர். இதேபோல் முன்பு வெனிசுலா நாட்டுக்கான தூதராகவும், துபைக்கான தூதராகவும் பணியாற்றினார். முன்னர் நியூயார்க், இஸ்லாமாபாத், ரோம், அபுதாபி ஆகிய நாடுகளில் தூதரகங்களில் பணியாற்றியவர் சின்ஹா.

இதேபோல் இலங்கைக்கான கனடா நாட்டின் புதிய தூதரும் மகிந்த ராஜபக்சேவை இன்று சந்தித்துப் பேசினர்.

English summary
Newly appointed Indian High Commissioner to Sri Lanka Y. K. Sinha presented his credentials to SL President Mahinda Rajapaksa at 10.45 a.m. today at a ceremony held at the Presidential Secretariat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X